விஜய்யின் மகன் ஹீரோவாக நடிக்கும் ‘குஷி-2’ : தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் விருப்பம்..
காதல், காமெடி, இசை, பாடல், காட்சியமைப்பு என அனைவராலும் ஈர்க்கப்பட்ட படம் குஷி. விஜய்-ஜோதிகா நடிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம். இப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். இதை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும்போது, ‘தமிழில் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு, இந்தியிலும் […]