Browsing tag

actor simbu

வெற்றிமாறன், அஷ்வத் மாரிமுத்துவை தொடர்ந்து, அறிமுக இயக்குநரின் கதையில் சிம்பு..

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, புதிய படமொன்றில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனை அறிமுக இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கவுள்ளார். அவர் இதற்கு முன்பாக குறும்படம் ஒன்றை மட்டுமே இயக்கி இருக்கிறார். இப்படத்தினை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் சுமூகமான முடிவு எட்டப்படும் பட்சத்தில், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். தற்போது […]

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் வில்லன் உபேந்திராவா? கிச்சா சுதீப்பா?

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய ‘வடசென்னை’ படம் ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகம் உருவாகத் திட்டமிடப்பட்டது. இந்நிலையில், வடசென்னை பற்றிய வேறொரு புதிய கதைக்களத்தில் தற்போது சிம்பு நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘அரசன்’ என பெயரிடப்பட்டு படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையிலேயே நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக வடசென்னையை அரங்குகளாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘அரசன்’ படத்தில் […]

‘எஸ்டிஆர்-49’ படம் குறித்து, தயாரிப்பாளர் தாணு அப்டேட்ஸ்: ரசிகர்கள் அதிருப்தி..

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கடந்த வாரம் எஸ்டிஆர் 49 ப்ரொமோ வரும் 4-ந்தேதி வெளியாகும் என எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதோடு இந்த முன்னோட்ட வீடியோவுக்காக சிம்பு டப்பிங் செய்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதனால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் இருந்தனர். இந்நிலையில் வெற்றிமாறன், சிம்பு படத்துக்கான ப்ரொமோ குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் தாணு. இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் தள பதிவில், ‘சிம்பு ரசிகர்களின் அன்பு […]

‘வேற லெவல் சார்’: வெற்றிமாறன் சொன்ன கதையை கேட்டு சிம்பு வியப்பு..

வடசென்னை கதைக்களத்தில் உருவாகவிருக்கும் எஸ்டிஆர் 49 படத்தின் தகவல்கள் காண்போம்.. வெற்றிமாறன் இயக்க கலைப்புலி தாணு தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார் சிம்பு. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ அக்டோபர் 4-ந்தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தின் கதை பற்றி சுவாரஸ்யமான தகவல் கிடைத்திருக்கின்றது. அதாவது, சிம்பு தற்போது தாய்லாந்தில் இருப்பதால், வீடியோ காலின் மூலம் வெற்றிமாறனிடம் கதை கேட்டுள்ளார் சிம்பு. வெற்றிமாறன் முழு கதையையும் சொன்ன பிறகு, சிம்பு அசந்துபோய் விட்டார். ‘வேற லெவல் சார்..’ என […]

சிம்புவின் சாதனையை முறியடித்தார் தளபதி விஜய்..

தளபதி விஜய்யின் கடைசிப்படமாக ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படம், பொங்கலை முன்னிட்டு 9-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், வசூலில் மட்டுமல்லாமல் தற்போது சோஷியல் மீடியாவிலும் தன் சாதனைகளை நிகழ்த்தி காட்டியிருக்கின்றார் விஜய். அதாவது, தமிழ் நடிகர்களிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட நடிகர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் விஜய். 14 .6 ஃபாலோவர்ஸ் பெற்று இன்ஸ்டாகிராமில் தமிழ் நடிகர்களில் அதிக ஃபாலோவர்ஸ் பெற்றவர் என்ற சாதனையை விஜய் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு சிம்புதான் இந்த சாதனையை […]

சிம்பு நடிக்கும் ‘வடசென்னை’ படம் இரண்டு பாகங்கள்: வெற்றிமாறன் தகவல்..

சிம்பு நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படம் தொடர்பாக, இயக்குனர் வெற்றிமாறன் பேசிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. ‘தக் லைஃப்’ ரிலீசுக்கு பின்பாக ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்தார் சிம்பு. அவ்வகையில், வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘சிம்புவை வைத்து இயக்கும் படம் 5 எபிசோடுகளாக இருக்கும். தற்போது 1 மணி 15 நிமிடம் படம் உள்ளது. ஒரு எபிசோடு கூட முடியவில்லை. […]

சிம்பு நடிக்கவிருக்கும் ‘வடசென்னை’ கதைக்களம் குறித்து வெற்றிமாறன்..

மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்து வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘வடசென்னை’ படம் தொடங்கப்பட்டபோது, முதலில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது. பின்பு சில காரணங்களால் நடைபெறவில்லை. அக்கதையில் தனுஷ் நடிக்க வந்தவுடன், அதனை அவருக்கு ஏற்ற வகையில் மாற்றினேன். இப்போது, சிம்பு நடிக்கவுள்ள படத்தின் கதை என்னவென்றால், முதலில் சிம்பு நடிக்கவிருந்த வடசென்னை கதை தான். ஒரே காலகட்டத்தில் வேறொரு இடத்தில் நடிப்பது மாதிரி இருக்கும். ’வடசென்னை’ படத்தில் நடித்த கதாபாத்திரங்களும் […]

வெற்றிமாறன்-சிம்பு இணைந்த திரைப்படம் குறித்து, இயக்குநர் நெல்சன் சூசக தகவல்..

சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் ஒரு ப்ரோமோ வீடியோவை ஷூட் செய்திருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இயக்குநர் நெல்சனும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்துள்ளார். இது குறித்து நெல்சனிடம் , சிம்பு -வெற்றிமாறன் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘நீங்க என்ன எல்லாத்தையும் எங்கிட்டே கேட்குறீங்க, இதெல்லாம் ரகசியம், சொல்லக்கூடாது. இதைச் சொல்ல எனக்கு அனுமதியும் கிடையாது’ என கூறினார். இதன் மூலம் சிம்பு, வெற்றிமாறன் படத்தில் நெல்சன் நடிக்கின்றார் என்றே தெரிகின்றது. ஏற்கனவே வெளியான தகவலின்படி […]

சிம்பு நடிப்பில் உருவாகும் படம் குறித்து, வெற்றிமாறன் அறிவிப்பு..

வெற்றிமாறன்-சிம்பு இணைந்துள்ள படத்தின் தகவல்கள் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் STR 49 என்ற திரைப்படம் தயாராகவிருந்தது. இதற்கான ப்ரோமோ ஷூட் கூட நடத்தப்பட்டது. அந்த ப்ரோமோவின் மூலம் இப்படத்தின் அறிவிப்பை வெளியிடலாம் என படக்குழு முடிவெடுத்திருந்தது. ஜூலை மாதமே இதன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்குள் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிகின்றது. அதன் விளைவாக இன்றுவரை இப்படத்தின் அறிவிப்பு வரவில்லை. தயாரிப்பாளர் மாறலாம், ஹீரோ மாறலாம் என்பது போன்ற […]

வெற்றிமாறன்-சிம்பு இணைந்த புதிய படம் கைவிடப்பட்டதா?

வெற்றிமாறன் இயக்கத்தில், ‘வடசென்னை’ கதைக்களத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை வெற்றிமாறன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ பதிவில் உறுதிப்படுத்தி இருந்தார். இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. இந்தக் கூட்டணி முயற்சிக்கு காரணமானவர் தாணு என்பது நினைவுகூரத்தக்கது. தற்போது சிம்பு – வெற்றிமாறன் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சிம்புவிடம் சம்பளப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையாத காரணத்தினால், இப்படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் சம்பளம், படத்தின் பட்ஜெட் உள்ளிட்டவற்றை கணக்கிட்டபோது, உரிமைகள் விற்பனையின் மூலம் […]