சிம்புவும் கயாடுவும் நல்ல பொருத்தம் என நெட்டிசன்ஸ் தெரிவித்து வருவது வைரலாகி வருகிறது. இது பற்றி நிகழ்ந்த இன்றைய மங்கல பூஜையை பார்ப்போம்..
சிம்பு நடிக்கும் ‘STR49’ படத்தை ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் இணைந்துள்ளார். மேலும் சந்தானம், விடிவி கணேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். இப்டத்துக்கான பூஜை இன்று போடப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
சிம்புவின் கனவுப்படமாக உருவாகவுள்ள அவரது 50-வது படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. மேலும் ‘டிராகன்’ வெற்றியைத் தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், தனது 51-வது படத்தில் இணைகிறார்.
இந்நிலையில், ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், அதிரடியாக பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பையும் இன்று தொடங்கினர். இந்த படத்துக்கு, அனிருத் இசையமைக்க மறுத்த நிலையில், சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.
இன்று நடைபெற்ற பூஜையில் சிம்பு, வேட்டி சட்டையில் வந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம் மற்றும் விடிவி கணேஷ் உடன் சிம்பு இணைந்துள்ளார்.
வேட்டி சட்டையில் சிம்பு பட பூஜைக்கு வந்த நிலையில், மஞ்சள் நிற சுடிதார் அணிந்து சிம்புவுக்கு அருகே கயாடு லோஹர் நின்ற காட்சிகள் ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளது. ‘ரொம்ப மங்கலகரமாக இருக்கிறது. நல்ல பொருத்தம்’ எனவும்..
‘அப்படியே இந்த வருட இறுதிக்குள் ரிலீஸ் செய்தால் சிறப்பான சம்பவமாக இருக்கும், கல்யாணச் சாப்பாடு போல ருசிக்கும்’ எனவும் ரசிகர்கள் ஆவலாய் தெரிவித்து வருகின்றனர்.