‘மதராஸி’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ், மற்றும் நடவடிக்கை..

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ படத்தின் தகவல்கள் காண்போம்..

ஏ.ஆர்.முருகதாஸ் -சிவகார்த்திகேயன் முதல்முறையாக இணைந்திருக்கும் ‘மதராஸி’ படம் அடுத்த வாரம் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் என படக்குழு பல மாநிலங்களில் ‘மதராஸி’ பட ப்ரோமோஷனை செய்து வருகின்றனர். இப்படத்திற்கு சென்சார் குழு U /A சான்று வழங்கியுள்ளது.

படத்தில் ஒரு சில காட்சிகளில் இடம்பெறும் வசனங்கள் மற்றும் வன்முறைக் காட்சிகள் இந்த U /A சான்றிற்கு காரணம் என தெரிகின்றது. சென்சார் குழு இப்படத்தில் எட்டு இடங்களில் கட் மற்றும் மியூட் செய்திருக்கின்றது. அந்த ரிப்போர்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் U சான்று பெற்ற படங்களாக இருந்துள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படங்களாக சிவகார்த்திகேயன் படங்கள் இருக்கும். ஆனால், இப்படத்திற்கு சென்சார் குழு U /A சான்று கொடுத்துள்ளதால் ஒரு சிலர், இப்படத்தை குழந்தைகளும் குடும்பங்களும் பார்க்கலாமா? என கேட்டு வருகின்றனர். ஆனால், கண்டிப்பாக மதராஸி திரைப்படத்தை குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரும் பார்க்கலாம் என்பதே கருத்தாகவுள்ளது. .

முழுக்க முழுக்க சீரியஸான ஒரு ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் ‘அமரன்’ படத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதுபோல, அவரின் திரைப்பயணத்தில் ‘மதராஸி’ படமும் முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

sivakarthikeyan starrer madharaasi movie censor full details
actor sivakarthikeyanAR Murugadossmadharaasi movieசிவகார்த்திகேயன்மதராஸி