எம்.ராஜேஷ், ஜீவா, யுவன் மீண்டும் இணையும் புதிய படம்..

காமெடியை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் தயாரிப்பாளருக்கு என்றும் நம்பிக்கையையே அளித்து வருகின்றது. இதில், இயக்குநர் சுந்தர்.சி இன்றும் ஸ்கோர் செய்து வருகின்றார்.

அவ்வகையில், எம்.ராஜேஷ் இயக்குநராக அறிமுகமான முதல் படம் ‘சிவா மனசுல சக்தி’. இப்படத்தில் ஜீவா, அனுயா, சந்தானம், ஊர்வசி. சத்யன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வெற்றி பெற்றது. யுவன் இசையில் பாடல்கள் பிரபலமாகின.

தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜேஷ் – ஜீவா – யுவன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

தற்போது ஜீவா உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ராஜேஷின் முந்தைய படங்கள் போலவே, இப்படமும் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ளது.

மேலும், காமெடியை மையப்படுத்தி நீண்ட இடைவெளிக்கு பிறகு, பிரபுதேவா-வடிவேலு இணையும் படமும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

siva manasula sakthi movie team reunites
Actor Jeevadirector m.rajeshYuvan Sankar Rajaசந்தானம்வடிவேலு