மனோஜ்க்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு, சந்தோஷத்தில் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

மனோஜ்க்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளதால் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து, மீனா புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க ரோகினி நான் எடுத்து தர என்று போனை வாங்க முயற்சி செய்கிறார். ஆனால் நாங்களே எடுத்துக்குறோம் என்று முத்து சென்று விடுகிறார். இதனால் மீண்டும் இந்த வாட்டி எடுக்க முடியல என்று டென்ஷன் ஆகிறார் ரோகிணி. பிறகு மனோஜ் சொன்ன பிசினஸ் மேன் வர அவரை பொக்கே கொடுத்து வரவேற்கிறார் மனோஜ். அவர் மனோஜை பார்த்து வளர்ந்து வரும் தொழிலதிபரா இருக்கீங்க கேள்விப்பட்டிருக்க என்று அவரைப் பற்றி விசாரித்து விட்டு உள்ளே வருகிறார் பிறகு மனைவியை அறிமுகப்படுத்திய மனோஜ் குடும்பத்தை அறிமுகப்படுத்துகிறார். அண்ணாமலை இடம் மூணு பிசினஸ் மேன் ஓட அப்பா என்கிற பெருமை உங்களுக்கு இருக்கும் என்று சொல்ல, அவருக்கு இதுவும் புரியாமல் இருக்க உடனே மனோஜ் உங்க ஆபீஸ்ல இருந்து வந்திருக்காங்க என்று சொல்லி அண்ணாமலை அனுப்பி வைக்கிறார்.

விஜயாவை அறிமுகப்படுத்தும்போது டான்ஸ் அகாடமி வச்சிருப்பதாக சொல்லுகிறார் ரோகினி. உடனே பார்வதி உன்கிட்ட படிக்கிறதே 10 பேரு அதுக்கு பேரு அகாடெமியா என்று சொல்ல அப்படி கூட ஒரு பேர் இருக்குமோ என்னமோ விடு என்று சொல்லி அவர்களும் கிளம்பி விடுகின்றனர். மற்றவர்களிடம் பேசிவிட்டு முத்துவை கூப்பிடுகிறார், 50 கார வச்சி மெயின்டெய்ன் பண்றீங்க பெரிய விஷயம் என்று சொன்ன முத்து எஸ் எஸ் என்று சொல்லுகிறார். அது மட்டும் இல்லாமல் இன்னும் உலக அளவுல பிசினஸ் பண்ண போறேன் 100 கார் வாங்க வேண்டிய ஆம்பிஷன் இருக்கு என்று எல்லாம் அளந்து விடுகிறார் நான் இந்தியாவிலே இருக்க மாட்டேன் ஜப்பானிலிருந்து நேத்து தான் வந்தேன் என்று எல்லாம் சொல்ல மனோஜ் போதும் போதும் என சைகை காட்டுகிறார் பிறகு இது உங்க மனைவி தானே என்று சொல்ல அவங்க என்ன பிசினஸ் பண்றாங்க என்று கேட்க பூந்தோட்டம் இருப்பதாக சொல்லுகிறார்.

பிறகு அவரை சமாளித்து ரவியிடம் சல்ல அவரும் ஒரு வழியாக மனம் சொன்னதை சொல்லி சமாளித்து விடுகிறார். ஸ்ருதியின் அம்மா வர அவரை வரவேற்று கேக் ரெடியாயிடுச்சு கட் பண்ணிடலாம் சொல்லிவிட்டு உள்ளே வருகிறார். அனைவரும் குடும்பமாக நின்று கொண்டிருக்க ரோகினி மனோஜ் இருவரும் கேக்கை வெட்டி மாறி மாறி ஊட்டி கொள்கின்றனர். மனோஜ் பிஸ்னஸ் மேன் இடம் எங்களை பத்தி பெருமையா பேசுங்க சார் என்று சொல்ல உங்க அப்பா முதல்ல பேசட்டும் என்று சொல்லுகிறார் உடனே முத்து அவருக்கே தெரியுது யார் முதல்ல பேசணும்னு என்று சொல்லிவிட்டு மைக்கை அண்ணாமலை கையில் வாங்கி கொடுக்கிறார்.

SiragadikkaAasai Serial Today Episode Update

அண்ணாமலை எங்களுக்கு மூணு ஆம்பள பசங்க பிறந்தாங்க ஆனா எங்களுக்கு பொண்ணுங்க இல்லை என்று நாங்க வருத்தப்பட்டு இருப்போம் ஆனால் எங்களுக்கு வந்த மூன்று மருமகளையும் நாங்க பொண்ணா தான் பாக்குறோம். மனோஜ் வளர்ச்சிக்கு காரணம் ரோகிணி தான். எப்பவுமே ஒரு அம்மா பேச்சையும் மனைவி பேச்சையும் கேட்டா கண்டிப்பா முன்னேற முடியும் என் பசங்களகளுக்கும் அதுதான் சொல்லி இருக்க, என்று சொல்லி முடிக்கிறார். உடனே பார்வதி அடுத்த நீதான் விஜயா என்று சொல்ல ஆர்வமாக மைக்கை வாங்க விஜயா போக மனோஜ் உடனே மைக்கை பிடுங்கி பிசினஸ் மேனிடம் கொடுக்கிறார். அவர் வாழ்த்து சொல்லி விட்டு உங்க குடும்பத்தை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நான் உங்களுக்கு இன்னொரு கிப்ட் கொடுக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார் என்னவாக இருக்கும் என்று அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

அவர் ஆரம்பிக்கப் போற புது பிசினஸ்க்கு டீலர் ஷிப்பர் மனோஜ்க்கு கொடுக்க போறன் என்று சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றன. அவர் கிளம்பிய பிறகு மனோஜ் அப்பா அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி சந்தோஷப்படுகிறார். பிறகு இந்த ஏற்பாடு செய்த நபர் என்ன மறந்துட மாட்டீங்களே என்று சொன்ன உங்களை எப்படி மறக்க முடியும் என்று சொல்லிவிட்டு சரி பார்ட்டி எப்போ ஆரம்பிக்கலாம் என்று சொல்ல அம்மா அப்பாவுக்கு இது பிடிக்காது நான் சாப்பிட வச்சு அவங்கள வீட்டுக்கு அனுப்பிட்டு சொல்றேன் அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார்.

மனோஜ் போய் சாப்பிடுங்கப்பா என்று அனைவரையும் அனுப்பி வைக்க, அந்த நபர் சரக்கு பாட்டலை பெட்டியுடன் தூக்கி வருகிறார் என்ன பிரதர் இது என்று கேட்க ஃபாரின் சரக்கு என்று சொல்லுகிறார் இப்படி அப்படி குடுப்பீங்க அடியில புடிச்சு தூக்கிட்டு வாங்க கீழ விழுந்தால் உடைந்துவிடும் என்று சொல்லிவிட்டு என் பிரதர் பாரின் சரக்கு குடிச்சா நெஞ்சு எரியாதுன்னு சொல்றாங்களே அப்படியா என்று கேட்க ஸ்மூத்தா போகும் என்று சொல்லி முத்துவின் ஆசையை தூண்டுகிறார். நீங்க குடிக்கலையா என்று கேட்க முத்து மீனாவை பார்க்க அவர் அங்கிருந்து முத்துவிடம் வருகிறார்.

முத்துவை குடிக்க விடாமல் மீனா தடுப்பாரா? இல்லை ரோகினியின் திட்டம் நிறைவேறுமா ?என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

SiragadikkaAasai Serial Today Episode Update
manojMeenaMuthuRaviRohiniSiragadikkaAasai SerialSiragadikkaAasai Serial Today Episode UpdateVijayavijaytvஅண்ணாமலைசிறகடிக்க ஆசைமனோஜ்மீனாமுத்துரவிரோகினிஸ்ருதி