நின்று போன மனோஜின் கல்யாண பேச்சு வார்த்தை.. சோகத்தில் விஜயா மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜின் கல்யாண பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துள்ளது.

siragadikka asai serial today episode update 14-03-26

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவும் ஸ்ருதியும் நடந்து கொண்டிருக்க விஜயா வந்து பேசுகிறார் அப்போது மனோஜ்க்கு பெண் பார்க்க போகும் விஷயத்தை சொன்ன பிறகு விஜயாவும் சேர்ந்து நடக்கிறார் முடிந்த பிறகு கிளம்ப சுருதி மீனாவும் எதற்காக அவங்க கிட்ட எதுவுமே பேசவில்லை என்று சொல்ல இவளை ஏன்டா பார்த்தமோன்னு இருக்கு ஜோசியக்காரமா இவள பார்க்க கூட கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட மீனாவுக்கு சுருதி ஆறுதல் சொல்லுகிறார். மறுநாள் காலையில் விஜயாவும் மனோஜ் இருவரும் பெண் பார்க்க செல்கின்றனர் அவர்கள் வரவேற்று உட்காரவைத்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்க பிறகு பெண்ணை கூப்பிட மனோஜ் ரொம்ப பிடித்து விடுகிறது. மனோஜ் பெண்ணையே பார்த்துக் கொண்டிருக்க காபியை கூட எடுக்காமல் இருக்கிறார் உடனே விஜயா காபியை எடுத்துக்க சொல்ல பிறகு ஸ்வேதா நான் கொஞ்சம் தனியா பேசணும் என்று சொல்லி மனோஜை கூப்பிடுகிறார்.

சரி ஓகே என்று மனோஜ் வேகமாக எழுந்திருக்க விஜயா அதெல்லாம் எதுக்கு நம்ம பேச முடிவு பண்ணா போதாதா என்று சொல்ல ஸ்வேதாவின் அப்பா நம்ம காலத்துல மாதிரியெல்லாம் இப்போ கிடையாது அவங்களுக்கும் பிடிக்கட்டும் அவங்களும் மனசு விட்டு பேசட்டும் என்று சொல்லுகிறார். பிறகு அவர்கள் இருவரும் தனியாக சென்று பேச ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திவிட்டு படிப்பை பற்றி பேசுகின்றனர் பிறகு இருவருக்கும் பிடித்து விட அங்கிருந்து வந்து உட்காருகின்றனர் அப்போது பெண் வீட்டில் இருக்கும் ஒரு பெரியவர் வந்து விஜயாவிடம் பேசுகிறார் அப்போது உறவு முறை பற்றி பேச்சுக் கொண்டிருக்கும்போது தான் மனோஜ்க்கு ஸ்வேதா தங்கச்சி முறை வருவதாக சொல்லிவிடுகிறார்.

இதனால் மனோஜ் மற்றும் விஜயா அதிர்ச்சி அடைய இந்த சம்பந்தம் நடக்காது என்று சொல்லிவிடுகின்றனர். அந்த காலத்துல இருக்கிற முறை எல்லாம் இப்போ எதுக்கு என்று சொல்ல தெரியாம இருந்தா கூட பரவால்ல தெரிஞ்சிருச்சு இதுக்கு அப்புறம் செய்யறது தப்பு என்று முடிவெடுத்து விட்டு உங்க பையனுக்கு நீங்க வேற இடத்துல பொண்ணு பார்த்துக்கோங்க எங்களுக்கு ஏதாவது வரன் வந்தா நாங்க சொல்றோம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகின்றனர் வெளியில் வந்தவுடன் அண்ணாமலை என்னாச்சு என்று போன் பண்ணி கேட்க விஜயா நடந்த விஷயங்களை அண்ணாமலை இடம் சொல்லுகிறார்.

பிறகு மனோஜ் முத்து ரவி மூவரும் மொட்டை மாடியில் குடித்துக்கொண்டிருக்க முத்து கல்யாணம் சக்சஸ் ஆனதா ட்ரீட் கொடுப்பாங்க இவன் என்ன ஃபெயிலியர் ஆனதுக்கும் ட்ரீட் கொடுக்கிறான் என்று சொல்ல எனக்கு அந்த பொண்ண ரொம்ப புடிச்சுடுச்சு என்று சொல்லுகிறார் அந்த கடைசியாக ஒரு பெருசு வந்து கல்யாணத்துக்கு கெடுத்துட்டான் என்று சொல்ல ரவி மற்றும் முத்து இருவரும் சிரிக்கின்றனர். என் கஷ்டம் உங்களுக்கு புரியலையா நானே கல்யாணம் நடக்கலையேனு கவலையா இருக்கேன் என்று சொல்லுகிறார். பிறகு மனோஜ் என சொல்லுகிறார்? அதற்கு முத்து சொன்ன கதை என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 14-03-26
14-03-26episodeserialsiragadikka asaisiragadikka asai serial today episode update 14-03-26todayupdateசிறகடிக்க ஆசைமனோஜ்மீனாவிஜயாஸ்ருதி