விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் முன்னரே நாயகி மாற்றம்.. சிந்து பைரவி சீரியலில் நடிக்கப்போவது யார் தெரியுமா?

ஒளிபரப்பாகும் முன்னரே சிந்து பைரவி சீரியலின் நாயகி மாற்றப்பட்டுள்ளார்.

sindhu biravai serial new heroine update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் புதிதாக இரண்டு சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளது அதில் ஒன்று சிந்து பைரவி. இந்த சீரியலில் பிக் பாஸ் ரவீனா கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார்.

தொடர்ந்து இந்த சீரியலில் ப்ரோமோ வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சீரியலில் இருந்து தற்போது ரவீனா விலகி உள்ளதாகவும் அவருக்கு பதிலாக ஆர்த்தி சுபாஷ் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஆர்த்தி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.தற்போது இந்த சீரியலிலும் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார்.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


sindhu biravai serial new heroine update
new heroineserialsindhu biravaisindhu biravai serial new heroine updateupdateஆர்த்திபிக் பாஸ் ரவீனாவிஜய்டிவிவீட்டுக்கு வீடு வாசப்படி