செல்ஃப் லவ் எப்பவுமே தோற்காது.. கேபிஒய் பாலா மோட்டிவேஷனல் ஸ்பீச்..!

செல்ஃப் லவ் எப்பவுமே தோற்காது என்று கேபிஒய் பாலா பேசியுள்ளார்.

self love never fails.. kpy bala motivational speech..!

தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கோமாளியாக பங்கேற்ற அவர் நகைச்சுவை மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் பாலா வெள்ளித் துறையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமானார்.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலா மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுத்துள்ளார். அப்போது பேசிய அவர் சந்தோஷமா இருங்க ஜாலியா இருங்க எப்பவுமே அப்பா அம்மா பேச்சை கேளுங்க டீச்சர்ஸ் பேச்ச கேளுங்க சந்தோஷமா இருங்க என்று கூறி உள்ளார்.

இது மட்டும் இல்லாமல் ஒரே வார்த்தை மட்டும் சொல்லிக்கிறேன் என்று சொல்லி, லவ் ஃபெயிலியர் என்று சொல்லி வாழ்க்கையை கெடுத்துக்காதீங்க, ஒன் சைடு லவ் தோத்துடும் டபுள் சைடு லவ் தோத்துடும் ஆனா செல்ஃப் லவ் எப்பவும் தோற்காது சந்தோஷமா இருங்க ஜாலியா இருங்க என்று சொல்லிவிட்டு அவரது உரையை முடித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

self love never fails.. kpy bala motivational speech..!
KPY BalaLatest newsmotivational speechnever failsself loveself love never fails.. kpy bala motivational speech..!Tamil cinemaகலக்கப்போவது யாருகாந்தி கண்ணாடிகுக் வித் கோமாளிகேபிஒய் பாலா