ஐபிஎல் தாக்கத்தால் சமந்தாவின் ‘மா இண்டி பங்கம்’ ரிலீஸ் தேதி மாற்றம்!

நடிகை சமந்தா தயாரித்து நடித்துள்ள ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ (Tralala Moving Pictures) மூலம் சமந்தா தயாரித்துள்ள முதல் திரைப்படம் இது. ‘ஓ! பேபி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் நந்தினி ரெட்டி, மீண்டும் சமந்தாவுடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். இத்திரைப்படம் காதல், குடும்ப உறவுகள் மற்றும் தனிமனித வலிமையை மையமாகக் கொண்ட கதையாக உருவாகியுள்ளது.

சமந்தா ‘மயோசிடிஸ்’ உடல்நலப் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து நடித்துள்ள முதல் படம் என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இத்திரைப்படம் மே 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஐபிஎல் (IPL 2026) கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், படத்தின் வசூலைப் பாதிக்காத வகையில் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி, இப்படம் தற்போது ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சமந்தாவுடன் குல்ஷன் தேவய்யா, திகாந்த், மற்றும் பழம்பெரும் நடிகை கவுதமி, மஞ்சுஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மற்றும் தமிழ் எனப் பல மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

கிரிக்கெட் திருவிழா முடிந்த பிறகு, கோடை விடுமுறையின் இறுதியில் சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ ரசிகர்களைச் சந்திக்க வருகிறது. சமந்தாவின் புதிய அவதாரத்தைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஜூன் 19 வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Maa Inti BaangaramNandini ReddySamantha