நிறைமாத கர்ப்பிணியாக போட்டோ ஷூட் நடத்தி முடித்துள்ளார் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் தமிழில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் சீரியல் நடிகை சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
சில மாதங்களுக்கு முன் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக வெளியிட்டு இருந்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.