சூப்பர் ஸ்டாரின் ‘பாட்ஷா’ புதிய பொலிவோடு ரீ ரிலீஸ்: சுரேஷ் கிருஷ்ணா தகவல்

‘பாட்ஷா’ திரைப்பட ரீ ரிலீஸ் பற்றிய விவரம் காண்போம்..

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஜனகராஜ், விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த ‘பாட்ஷா’ படம் கடந்த 1995-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது.

பாட்ஷா மட்டும் அல்ல, வில்லன் மார்க் ஆண்டனியையும் யாராலும் மறக்க முடியாது. இப்படம் ரிலீஸாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் பிரபலமாக உள்ளது.

தேவா இசையில் பாடல்களும், பி.ஜி.எம்.மும் வேற லெவலில் இருந்தது. பாட்ஷா பட பி.ஜி.எம். மாஸாக இருந்தது. இந்த படத்தை 2017-ம் ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் ‘பாட்ஷா’ படத்தை 4கே டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 90ஸ் கிட்ஸுகள் மட்டும் அல்ல, 2கே கிட்ஸுகளும் பழைய படங்களை தேடித் தேடிப் பார்க்கும் டிரெண்ட் அதிகரித்து வருகிறது

இந்த நேரத்தில், பாட்ஷா படம் 4கே டிஜிட்டலில் ரீ ரிலீஸாகவிருக்கும் செய்தி, அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ‘பாட்ஷா’ படம் ரீ ரிலீஸில் பாக்ஸ் ஆபீஸை தெறிக்க விடப்போகிறது என நம்பப்படுகிறது.

கோடை விடுமுறையை மனதில் வைத்து பாட்ஷா படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள். அதனால், பாட்ஷா பாயை பார்க்க பலரும் தியேட்டர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதனையடுத்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

baashha moviedirector suresh krishnarajini kanthலோகேஷ் கனகராஜ்ஜெயிலர் 2