‘லவ் டுடே’ பட 2-ம் பாகம்: பிரதீப் ரங்கநாதன் அப்டேட்..

ரவிமோகன் நடிப்பில் ‘கோமாளி’ படத்தின் வாயிலாக இயக்குராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தனது 2-வது படமாக ‘லவ் டுடே’ இயக்கி ஹீரோவாகவும் ஆகி கவனம் ஈர்த்தார்.

இப்படத்தில் இவானா, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா சரத்குமார், ரவீனா ரவி ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். ‘காதலர்கள் இருவர் தங்களது செல்ஃபோனை பரிமாறிக் கொள்ள, அதனைத் தொடர்ந்து நடக்கும் கலகலப்பான நிகழ்வுகளை மையமாக வைத்து ‘லவ் டுடே’ படத்தை உருவாக்கியிருந்தார் பிரதீப். அவர் ஹீரோவாக அறிமுகமான முதல் படமே பாக்ஸ் ஆபீஸில் ரூ. 100 கோடி வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து பிரதீப் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாஸ் காட்டியது. இந்நிலையில் இவர் தற்போது ‘டியூட்’ படத்தில் நடித்திருக்கிறார்.

சுதா கொங்கராவிடம் உதவியாளராக பணியாற்றிய கீர்த்திஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் பிரதீப்புடன் மமிதா பைஜு, சரத்குமார் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். இதற்கிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ‘ படத்திலும் பிரதீப் ஹீரோவாக இணைந்துள்ளார்.

‘ட்யூட் ‘ பட ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது தெரிவித்த பிரதீப், ‘லவ் டுடே’ படத்தின் இரண்டாம் பாகத்தினை உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. அதற்கான யோசனை ஒன்றும் என்னிடம் தயாராக உள்ளது. ஆனால், உடனடியாக அந்த படத்தினை இயக்க மாட்டேன். என்னுடைய எழுத்துக்களில் வேறு வேறு கதைகளை முயற்சி செய்ய ஆர்வமாக இருக்கிறேன். அதன்பின்னர் ‘லவ் டுடே 2′ படத்தினை இயக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

pradeep ranganathan gives update about love today 2
actor pradeep ranganathandude movielove today2 movieபிரதீப் நங்கநாதன்மமிதா பைஜு