மகுடம் திரை விமர்சனம்

தந்தை – மகன் உறவு, பழிவாங்கும் கதை என வழக்கமான களத்தைக் கொண்டிருந்தாலும், வித்தியாசமான காட்சியமைப்பும், பரபரப்பான திரைக்கதையும் இணைந்து ‘மகுடம்’ படத்தை சுவாரஸ்யமான ஆக்‌ஷன் படமாக மாற்றியிருக்கிறது. நடிப்புடன் இயக்கத்திலும் விஷால் கவனம் ஈர்க்கிறார். மெடிக்கல் ரெப்பாக வேலை பார்க்கும் விஷால், மனைவி துஷாரா விஜயன் மற்றும் குழந்தைகளுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். குடும்பத்தின் நீண்ட நாள் கனவான கார் வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற, கஷ்டப்பட்டு பணம் சேர்த்து பழைய கார் […]

ரஜினியின் தர்மன் படத்தின் 2வது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படக்குழு அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாகியுள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அன்பறிவ் மாஸ்டர்ஸ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். முன்னணி திரைக்கலைஞர்களின் கூட்டணியில் உருவாகி வரும் இப்படம், பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா […]

துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்’ புதிய அறிவிப்பு தேதியை வெளியிட்டது படக்குழு!

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘I Am Game’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை பிரம்மாண்டமாக வெளியிடும் நோக்கில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் ஜோம் […]

ஆகஸ்ட் 21-ல் வெளியாகும் ‘மொத ராத்திரி’ – டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் நெகிழ்ச்சி

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் ரவி சங்கர், இயக்குநர் ராஜா கதை சொன்ன உடனேயே தங்களுக்கு பிடித்துவிட்டதாக தெரிவித்தார். சிறிய பட்ஜெட்டில் உருவாகி வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ […]