31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு – சுகன்யா ஜோடி!

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 21-வது படைப்பாக உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மேரிகோல்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். சுதர்சன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிரபு மற்றும் சுகன்யா 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜோடியாக இணைகின்றனர். முன்னதாக ‘செந்தமிழ்ப் பாட்டு’, ‘சின்ன மாப்ளே’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’ உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ரக்ஷன் மற்றும் நம்ரிதா முக்கிய […]

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரை விமர்சனம்

துப்பாக்கி சுடும் வீரராகவும், தமிழ்நாட்டில் முன்னணி தொழிலதிபராகவும் வலம் வருகிறார் சூர்யா. திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருக்கும் அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது தாய் ராதிகா விரும்புகிறார். குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார் சூர்யா. இந்நிலையில், குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் வருகிறது. சிகிச்சைக்கு குழந்தையின் தாயும் உடனிருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, வாடகைத் […]

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தனின் ‘அன்பில் அவன்’ டைட்டில் டீசர் ரிலீஸ்!

அசோக் செல்வன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளன. ஆர். கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள இப்படத்திற்கு கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ஆர்.கே. செல்வா மேற்கொள்ள, கலை […]

ரவி தேஜா – பிரியா பவானி ஷங்கரின் இருமுடி கட்டு பட டிரைலர் வெளியானது!

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் திரையரங்க டிரெய்லர் இன்று தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகியுள்ளது. சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியாகியுள்ள டிரெய்லர், குடும்ப உறவுகள், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் நிறைந்த கதையை வெளிப்படுத்துகிறது. ரவி தேஜா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவராக நடித்துள்ளார். மனைவி […]

பியார் ப்ரேமா கல்யாணம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளையே தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன நடக்கும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் இளன் இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் அவர் முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி Netflix-ல் வெளியாகிறது. டிரெய்லரில் சான்வி மேக்னா பவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னம்பிக்கையும் […]

பியார் பிரேமா கல்யாணம் டிரெய்லர் வெளியீடு -ஆகஸ்ட் 21 முதல் Netflix-ல் ஸ்ட்ரீமிங்!

இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், ராதிகா சரத்குமார், இளங்கோ குமரவேல், செந்தில், யோகிபாபு, சான்வி மேக்னா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே அதிக தைரியம் தேவைப்படும் நிலையில், இளனிடம் […]

வைபவ் நடித்துள்ள ‘மாறுவேஷம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படமான ‘மாறுவேஷம்’, யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து ஓநைரோமன்சி பிக்சர்ஸ் சார்பில், மன்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் […]