சண்முக பாண்டியனின் வாணவேடிக்கை டிரெய்லர் வெளியானது!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சதீஷ் எம்.பி. தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர்கள் ஆர்யா மற்றும் ஜெயம் ரவி இன்று வெளியிட்டனர். சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குநர் திரு இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்க, அர்வி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்சன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் ஷிவானி ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். குறிப்பாக, இயக்குநர் மோகன் ராஜா முதன்முறையாக முழுநீள வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. […]

ரெஜினா கசாண்ட்ரா – நாசர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு […]

‘ஜெயிலர் 2’ வெற்றிக்காக ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு தீபாவளி சிறப்புப் பரிசையும் வழங்கியுள்ளனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன், துணைத் தலைவர் எஸ். கமலக்கண்ணன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் […]

‘ஓம்’ இசை வெளியீட்டு விழா: 8,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள நடிகர் தனுஷின் ‘ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு, போலீஸ் அனுமதி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக 8,000 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுக்கும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தன்னைச் சுற்றி எழுந்துள்ள அரசியல் பேச்சுகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து […]

திரையுலகப் பிரபலங்களுக்கு தீபாவளி சிறப்புப் பரிசு வழங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி சிறப்புப் பரிசுகள் இந்த ஆண்டும் வழக்கம்போல் வழங்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், கலைப்புலி எஸ். தாணு, உலகநாயகன் கமல்ஹாசன், மகேந்திரன், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே. செல்வமணி, இசையமைப்பாளர் தீனா, இயக்குநரும் தயாரிப்பாளருமான பாண்டிராஜ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களுக்கு தீபாவளி சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் […]

தலைவருக்காக ஒரு மாதம் கொண்டாட்டம்… ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் அழைப்பு!

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பதிவில், “வாழ்நாள் முழுவதும் தலைவரின் ரசிகனாக இருந்து வருகிறேன். 75 வயதிலும் அவர் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. தலைவரின் 76-வது பிறந்தநாளையும், அவரது மாபெரும் வெற்றியையும் இணைத்துக் கொண்டாடும் வகையில், நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை ஒரு மாதம் முழுவதும் கொண்டாட்டங்களை நடத்த விரும்புகிறேன். தலைவரை நேரில் அழைத்து, அவர் முன்னிலையில் இந்தக் கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என்பதுதான் […]

டெத் ரயில்வே படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!

‘யாத்திசை’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரன், தனது அடுத்த படைப்பான ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகளைத் தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் இப்படம், வரலாற்று திரைப்பட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றதுடன், திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, தரணி ராசேந்திரன் மற்றுமொரு பிரம்மாண்டமான வரலாற்றுப் படைப்புடன் களமிறங்கியுள்ளார். […]

200 பேருக்கு தீபாவளிப் பரிசுகள் வழங்கிய விஜய் சேதுபதி!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்திலும் தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் மாபெரும் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த நவம்பர் 1-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ஆய்க்குடியில் உள்ள சேனைத் தலைவர் சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை துளி அறக்கட்டளை (Thuli Trust) சார்பில் நடிகர் விஜய் சேதுபதி, அஜித்குமார் ரவீந்திரன், சிவாஜி பிரபாகர் மற்றும் ஜெய் பாலா ஆகியோர் […]