ஹிருது ஹாருணின் “டெக்ஸாஸ் டைகர்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘டைகரியன் ரோர்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, பாடலில் ஹிருது ஹரூனின் வசீகரமான திரையிருப்பு, உற்சாகமான நடனம் மற்றும் எனர்ஜி நிறைந்த பெர்ஃபார்மன்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ‘தக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஹிருது ஹரூன், குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ‘மும்பைகர்’, ‘ஆல் வீ இமேஜின் அஸ் […]

திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் கருணாஸ்

தமிழ் திரையுலகில் நடிகர் கருணாஸ் தனது 25 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்யும் நிலையில், அவர் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் கருணாஸுக்கு, ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. இதுகுறித்து நடிகர் கருணாஸ் கூறுகையில், “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில் […]

16வது ஆண்டு திருமணத்தை ஒட்டி மனைவி ஆர்த்தியுடன் இருக்கும் படங்களை பகிர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இன்று தங்களது 16-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படங்களை ஆர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஆராதனா, குகன், பவண் என ஒரு பெண் குழந்தையும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே, […]

விஜய்யின் வாழ்க்கை வரலாறு படம் எடுத்தால் டைட்டில் என்ன தெரியுமா? அஸ்வத் மாரிமுத்து சுவாரசிய பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பயோபிக் திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, ‘டிராகன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்மன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கும் […]

ஹாய் திரைவிமர்சனம்

தனது பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு, காதல் கைகூடாததால் அவரது பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்குகிறார்கள். ஆனால், காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கும் கவின், குடும்பத்தினருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். மறுபுறம், தாயின் அன்பும், தந்தையின் அரவணைப்பும் இல்லாமல் வளரும் நயன்தாரா, திருமண வாழ்க்கைக்குள் சிக்காமல் தனது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். எதிர்பாராத விதமாக அவருக்கும் திருமண […]