‘பரோட்டா மாஸ்டர்’ விஜய் சேதுபதிக்கும் ‘கோடீஸ்வரி’ நித்யா மேனனுக்கும் சண்டை..
ஊடல்தானே கூடலுக்கு அழகு. அவ்வகையில் இல்லறத்தில் நிகழும் செல்லச் சண்டைகள் பேரினிது. இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடித்துள்ள படம் ‘தலைவன் தலைவி’. இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. தலைவன் தலைவி படத்தில், யோகிபாபு, செம்பியன் வினோத் என பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று […]