ரசிகர்களின் கோரிக்கையை ஏற்கிறேன்: சிம்பு டுவிட் வைரல்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்பு. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், சிம்புவின் நடிப்பு ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது. இந்நிலையில், ‘தக் லைப்’ படத்தை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அரசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தில் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் […]

‘அகண்டா-2’ படம் இந்திய அளவில் சாதனை படைக்கும்: இயக்குநர் நம்பிக்கை..

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. சில காரணங்களால், தற்போது பாலகிருஷ்ணாவுக்கு பதிலாக விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இதற்கிடையில், பாலகிருஷ்ணா நடிப்பில் போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள ‘அகண்டா-2’ படம் வெளியாகவுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ர கபிர் துஹார் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 5-ந்தேதி முதல் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ‘அகண்டா-2’ படம் குறித்து இயக்குநர் போயபட்டி ஸ்ரீனு தெரிவிக்கையில், […]

சுந்தர்.சி-விஷால் இணையும் புதிய படத்தின் அப்டேட்ஸ்..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருந்த ‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிய சுந்தர்.சி தனது அடுத்த படப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே, தனது அடுத்த படத்தினை உடனடியாக தொடங்க சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார். ஏசிஎஸ் நிறுவனம் மற்றும் விஷால் இணைந்து தயாரிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் […]

அனைத்து மக்களையும் அமீரகம் அரவணைக்கிறது: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு..

ஏழு தேசிய விருதுகள், இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்று உலகளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இந்நிலையில், அமீரக தேசிய தினம் நாளை செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அபுதாபி அல் வத்பா பகுதியில் ஷேக் ஜாயித் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக ஏ.ஆர்.ரகுமானின் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமீரகத்திற்காக இசையமைத்த ‘ஜமால் அல் இத்திகாத்’ என்ற சிறப்பு பாடல் வெளியிடப்பட்டது. அமீரகத்தின் நிறுவன தந்தை என போற்றப்படும் […]

நந்தினி வீட்டில் இருப்பதை அறியும் சூர்யா.. சுந்தரவல்லி செய்த வேலை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியிடம் லிஸ்ட் போட்டு என்னென்ன வேண்டும் என்பதை சொல்லிவிட்டு இதெல்லாம் செஞ்சு வச்சுட்டு எங்களை கூப்பிடு என சொல்லிவிட்டு சென்றுவிட நந்தினியும் சமைக்கப் […]

‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிறை. இப்படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை […]

பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த ஆதிரை..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் ஆதிரை வந்துள்ளார். போட்டியாளர்கள் பலரும் அவரை வரவேற்று நலம் விசாரிக்கின்றனர். என்ன பேசிக்கிறாங்க என்று கேட்க நீங்க என்ன பண்றீங்க […]

நீட்டிப்பு..துண்டிப்பு.. யாருடன்? போட்டியாளர்களின் பதில்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் நீட்டிப்பு துண்டிப்பு என இரண்டு டாகுகளை கொடுத்து யாருக்கு எதைக் கொடுப்பீர்கள் என்று கேட்கிறார் அதற்கு விக்ரம் பார்வதியிடம் உறவு […]

‘ஜெயிலர்-2’ படத்தின் வைரலாகும் ரஜினி புகைப்படம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர். நெல்சன் லைவ் லொகேஷனிலேயே படமாக்கியிருந்தார். அது பார்ப்பதற்கு மிக தத்ரூபமாக இருந்தது. ரசிகர்கள் ரசித்தனர். அதேபோல ‘ஜெயிலர்-2’ படத்தையும் பல லைவ் லொகேஷனில் படமெடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தில் ஒரு சண்டை காட்சியில் ரஜினி அதிக எடை கொண்ட ஒரு பொருளை தூக்கும்படியான காட்சி எடுக்கப்பட்டது. அப்போது, நெல்சன் க்ளோஸ் அப் ஷாட்டிற்கு மட்டும் ரஜினியை பயன்படுத்திவிட்டு வெயிட்டை தூக்குவதற்கு டூப்பை பயன்படுத்தலாம் என […]