குடும்பப் பின்னணியில் உருவான ‘சூர்யா-46’ படப்பிடிப்பு நிறைவு

‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. இப்படத்தில் சூர்யா வக்கீலாகவும், அய்யனாராகவும் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். ஆன்மீகம் கலந்த ஜானரில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுற்றதாக படக்குழு அறிவித்திருக்கிறது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மே மாதம் இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இதன் தலைப்புடன் கூடிய டீசர் விரைவில் வெளியாகவுள்ளது. நாகவம்சி தயாரிப்பில் […]

ஓடிடி நிறுவனங்களுக்கு சரத்குமார் கோரிக்கை..

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் ‘படைத் தலைவன்’ படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள ‘கொம்புசீவி’ படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், தார்னிகா, காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொன்ராம் இயக்கிய இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நகைச்சுவை கலந்த இக்கதையில், ரவுடியாக சண்முக பாண்டியன் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 19-ந்தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் […]

‘அகண்டா-2’ படம் பார்க்க பிரதமர் மோடி விருப்பம்: இயக்குநர் சீனு தகவல்..

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘அகண்டா 2’ படத்தை போயப்படி சீனு இயக்கியுள்ளார். இதில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஆதி பினிசெட்டி, கபீர் துல்ஹன் சிங், சாஸ்வதா சட்டர்ஜி, அச்யுத் குமார், பூர்ணா, ஹர்ஷா, ஜெகபதி பாபு, ராச்சா ரவி, ஐயப்பா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று வருகிறது. இப்படம் பாலய்யாவின் திரைப் பயணத்தில் சிறந்த படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ‘அகண்டா-2’ […]

பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்கவில்லை: மஞ்சு வாரியார் ஆதங்கம்..

மலையாள சினிமாவில் பிரபல நடிகைக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தொடர்புடைய மற்ற 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை மஞ்சு வாரியார் தெரிவிக்கையில், ‘நடிகையின் பாலியல் வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அந்த செயலை திட்டமிட்டு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி வருகின்றனர். ஆகவே, உரிய நீதி கிடைக்கவில்லை. எனவே, சதித் திட்டம் […]

பணத்துக்காக அனிருத் இசையமைக்கிறார்: தமன் ஓபன் டாக்..

தமிழ்த்திரையில் தனுஷ்-ஸ்ருதிஹாசன் நடித்து வெளியான ‘3’ என்றஎன்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். ரஜினியின் வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து, முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கும் கமிட் ஆகி வருகிறார். அவ்வகையில் சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது. இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் இசையமைப்பாளராக இருக்கும் தமன் இசையமைப்பில் ‘வாரிசு, பிரின்ஸ், எனிமி, ரசவாதி’ ஆகிய படங்கள் வெளியாகின. தற்போது, அகண்டா 2, தி […]