ரஜினி நடிப்பில் முழுமையான காதல் படம்: சுதா கொங்கரா ஆர்வம்..

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் ஜனவரி 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3-ந்தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ‘பராசக்தி’ படத்தின் புரோமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்நிலையில் இயக்குநர் சுதா கொங்காரா தெரிவிக்கையில், ‘ரஜினி நடிப்பில் காதல் படமொன்றை இயக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். அவர் தெரிவிக்கையில், ‘ஒரு முழுமையான காதல் படம் பண்ண வேண்டும் […]

‘ஜனநாயகன்’ படத்தின் கதை என்ன?: ஹெச்.வினோத் விளக்கம்..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ என்ற படக்கதையை அடிப்படையாக வைத்து தமிழுக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவிக்கையில், ‘ஜனநாயகன்’ படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விஜய் சாருடைய பேர்வல் வீடியோ இருக்கிறது, அழ வைக்க போகிறோம் என சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் […]

ஏஐ தொழில்நுட்பத்தால் விஜய்யின் புகைப்படங்கள், வைரல்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மட்டுமன்றி விஜய்யின் நண்பர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழா தொடங்கப்பட்ட உடனே விழா அரங்கில் இருந்து பல்வேறு வீடியோக்கள், புகைப்படங்கள் பகிரப்பட்டது. இந்த புகைப்படங்கள் வைரலாவதை முன்வைத்து, போலியாக ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படங்களும் வெளியானது. இதையும் பலர் உண்மை என நினைத்து பகிர்ந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். பின்பு, பலரும் இது ஏஐ […]

விஜய்க்கு, நாசர் விடுத்துள்ள அன்புக் கோரிக்கை..

மலேசியாவில் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் உள்ளிட்ட படக்குழுவினருடன் திரையுலகினர் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்பதால் பலரும் நெகிழ்ச்சியுடன் பேசினார்கள். இந்த விழாவில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்போது, ‘அமைதியும், பணிவும் தவிர கூர்மையான ஆயுதம் வேறு எதுவுமில்லை. அதுவே உங்களின் அடையாளம். என் மகன் படுத்த படுக்கையாக இருந்தான். அவனை மீண்டும் நடக்க வைத்தவர் விஜய் தான். […]

விஜய் சினிமாவை விட்டு விலகுவது பற்றி, கருணாஸ் கருத்து..

விஜய்யின் ’ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வரவுள்ளது. இது விஜய்யின் கடைசிப் படமாகும். அதன்பின் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இச்சூழலில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் மறைமுகமாக அரசியல் பேசினார். அவர் தெரிவிக்கையில், ‘என்னுடைய ரசிகர்கள் ஒருநாள், இரண்டு நாள் இல்லைங்க. கிட்டத்தட்ட […]

வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா-46’ படக்கதை என்ன?: தயாரிப்பாளர் விளக்கம்..

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆன்மீக கதைக்களத்தில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது. இதனையடுத்து சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ளார். ‘பிரேமலு’ படம் மூலம் பிரபல​மானமலை​யாள நடிகை மமிதா பைஜு. தமிழில் ‘ரெபல்’, ‘டியூட்’ படங்களில் நடித்த இவர்​ ,​‘ஜன​நாயகன்’ படத்​திலும் நடித்துள்ளார். தற்போது சூர்யா ஹீரோ​வாக நடித்​துள்ள 46-வது படத்​தி​லும் மமிதா பைஜு நடித்​துள்​ளார். இதில் அவர், சூர்​யா​வின் சகோ​தரி​யாக நடிப்​ப​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி இருந்​தன. இந்​நிலை​யில் […]

கை கால் எல்லாம் நடுங்கியது.. சூரியின் எமோஷனல் பேச்சு.!!

கடந்து வந்த பாதை குறித்து எமோஷனலாக பேசியுள்ளார் சூரி. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களம் இறங்கி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூரி அவர் இந்த இடத்திற்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை எமோஷனலாக கூறியுள்ளார். ஒரு வாய்ப்பை தேடும் நடிகனுக்கு கூப்பிட்டு டிரஸ் அளவெடுத்து போட்டு பார்த்து டயலாக் பேச சொல்லும்போது […]

பணம் இருக்கோ இல்லையோ ஆனால்? விஜய் ஆண்டனி ஓபன் டாக்.!!

விஜய் ஆண்டனியின் பேச்சு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல்வேறு படங்களில் இசையமைத்தது தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பது மட்டுமில்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த இவர் அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன், மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர் குடும்பத்தின் முக்கியத்துவம் குறித்து பேசி உள்ளார். அதாவது பணம் இருக்கோ இல்லையோ ஆனால் ஒரு நல்ல குடும்பம் இருந்தால் […]

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் ஷூட்டிங் அப்டேட்.!!

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையை சிவகார்த்திகேயன் அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் டான் திரைப்படம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது […]

எனக்காக எல்லாத்தையும் விட்ட என் ரசிகர்களுக்காக.. நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன்.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜயின் அதிரடி பேச்சு..!!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அதிரடியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய் என்ன பேசுவார் அவரது குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் […]