ரோகினி எடுத்த முடிவு, முத்து உண்மையை வீட்டில் சொன்னாரா?இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

ரோகினி முடிவு ஒன்று எடுக்க முத்து வீட்டில் உண்மையை சொன்னாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவிற்கு ரோகிணி குறித்த உண்மை தெரிய வந்து விடுகிறது அவர் குடித்துக்கொண்டிருக்க பிறகு வீட்டில் வந்து அனைவரிடமும் முன் உண்மை சொல்வது போலும் அதற்கு ரோகிணி இதுக்கு மேல உண்மையை மறைப்பதில் ஒன்னும் இல்லை அது என்னோட டிவின் சிஸ்டர் எங்க அக்கா […]

நந்தினிக்கு பாத பூஜை செய்த அருணாச்சலம், கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும் அ, அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா காலையில் தூங்கி எழுந்திருக்க நந்தினி தூங்கிக் கொண்டு இருக்கிறார். சூர்யா குளித்துவிட்டு வர மறுபக்கம் கல்யாணம் கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் விவகாரம்: தணிக்கை வாரியம் ஐகோர்ட்டில் சொன்ன தகவல்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9-ந்தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இதுவரை ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்துக்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ந்தேதி படத்தை பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கை […]

விஜய்யின் முழு நேர அரசியல் ஈடுபாடு குறித்து, குஷ்பூ கருத்து..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 9-ந்தேதி வெளியாகிறது. இப்படம்தான் எனது கடைசிப் படம் என எப்போது அவர் தவெக கட்சி துவங்கினாரோ அன்றே அறிவித்துவிட்டார். பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்காக, விஜய் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. திரைப்ப பிரபலங்களும் விஜய்யின் இந்த முடிவை கேட்டு சற்று அதிர்ச்சியானார்கள். அவ்வகையில் நடிகை குஷ்பூவும் விஜய்யின் இந்த முடிவு […]

முதுகில் அடிப்பவர்களைப் பற்றி எனக்கு கவலை கிடையாது: ரவிமோகன் பேச்சு..

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் வருகிற 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தில் முதல்முறையாக வில்லனாக நடித்திருக்கும் ரவிமோகன் தெரிவிக்கையில், ‘பலரின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட தங்கம் ‘பராசக்தி’. இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக ‘பராசக்தி’ வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிவகார்த்திகேயன் எதுவுமே இல்லாமல் இதுபோன்ற மேடைகளில் ஆரம்பித்து தற்போது இந்த இடத்துக்கு […]

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது?: கவுதம் மேனன் விளக்கம்..

விக்ரம் நடிப்பில. உருவான ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் தனது அடுத்த படம் குறித்து இயக்குநர் கவுதம் மேனன் கூறியதாவது: ‘அடுத்ததாக ஒரு காதல் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டேன் எனலாம். அதனைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறேன். ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மீதான பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அறிவிப்பு வரும். கன்னடத்தை தவிர இதர மொழிகள் அனைத்திலும் பணிபுரிந்துவிட்டேன். இப்போது கன்னடத்தில் ஒரு பெரிய ஸ்டாருக்கு ஒரு ஐடியா கூறியிருக்கிறேன். அவருக்கும் பிடித்திருக்கிறது. […]

கருப்பு படத்தின் ரிலீஸ் எப்போது? திருப்பூர் சுப்பிரமணியம் கொடுத்த அப்டேட்.!!

கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து திருப்பூர் சுப்ரமணியம் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது இதுகுறித்து சமீபத்தில் நடந்த நேர்காணல் […]

ஜனநாயகன் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கூடாதா? உயர்நீதிமன்றம் கேள்வி.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க கூடாதா என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் […]

சிம்பு, ரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி இருக்கும் இயக்குனர் ராம்குமார்.!!

சிவகார்த்திகேயனிடம் புதிய படத்திற்கான கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம்குமார். பார்க்கிங் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களில் படங்களை இயக்குவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே எஸ்.டி.ஆர் 49 படத்தை இவர் இயக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டு பூஜை முடிந்த பிறகு படம் நின்று போனது அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்திடம் கதை கூறி அவருக்கு பிடித்திருந்ததாக சொன்ன நிலையில் அவரும் இறுதியில் […]