கார்த்தி – மீனாட்சி சவுத்ரி இணையும் புதிய படம்: பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!

நடிகர் கார்த்தி மற்றும் நடிகை மீனாட்சி சவுத்ரி முதன்முறையாக ஜோடி சேரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் எளிய பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. தெலுங்கில் ‘மேட்’ (MAD) மற்றும் ‘மேட் ஸ்கொயர்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கல்யாண் சங்கர், இந்தப் படத்தின் மூலம் கார்த்தியுடன் இணைகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக (Comedy Entertainer) இது உருவாகவுள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) இந்தப் படத்தை பிரம்மாண்டமாகத் […]

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் எச்சரிக்கை: நடிகர் தேர்வுக் குறித்து பரவும் போலித் தகவல்கள்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வரும் சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் நடைபெறும் மோசடிகள் குறித்து அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ (SivaKarthikeyan Productions) மூலம் தரமான படங்களை வழங்கி வரும் இவர், இதுவரை ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’ மற்றும் ‘தாய்க்கிழவி’ போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தைத் தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். […]

உறவுகளை மையப்படுத்திய கதைதான் ‘சைக்கிள் கேப்’

காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தை கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம் ‘சைக்கிள் கேப்’! டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும் புதிய மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படமான ‘சைக்கிள் கேப்’, காதல், இசை மற்றும் உணர்வுகளின் கலவையுடன் உருவாகி வருகிறது. இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கும் இப்படத்தில் நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மியூசிக்கல் காதல் கதைகள் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் எப்போதும் தனித்துவமான வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘சிந்து பைரவி’, ‘முகவரி’, ‘துள்ளாத […]

“பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா

மெகா ஸ்டார் ராம்சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்துள்ள தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கிராமத்து பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. “பெத்தி” படத்தின் கதையை முதன்முதலாக கேட்ட தருணமே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ் கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா […]

ஆகஸ்டில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம், தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக “ஐ அம் கேம்” இருக்கும் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரம் மற்றும் படத்தின் உலகமே நவீன […]

சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வெளியீடு!

விஜய் சில்லா மற்றும் ஷஷி தேவிரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பவர் பேட்டா’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் மாஸ் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரையரங்க முதல் நாள் கொண்டாட்ட சூழலுடன் தொடங்கும் இந்த கிளிம்ப்ஸில், ரசிகர்களின் ஆரவாரத்துக்கு நடுவே சந்தீப் கிஷன் ஸ்டைலிஷ் […]

சல்மான் கான் – நயன்தாரா இணையும் புதிய படம்: வில்லனாக மோதுவது யார்?

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கும் அடுத்த பிரம்மாண்டத் திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நயன்தாரா நடிக்கும் இரண்டாவது நேரடி இந்தித் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னணி நட்சத்திரங்கள் இருவர் முதல்முறையாக இணைவதால் […]

அப்பா – மகனாக சிவராஜ்குமார் & அபிஷன் ஜீவிந்த்: புதிய படத்தின் படப்பூஜை தொடங்கியது!

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் மற்றும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவராஜ்குமார் உடன் புதிய படம் ஒன்றில் இணையவுள்ளார். மீண்டும் திரையில் அபிஷன் ஜீவிந்த் தனது முதல் படமான ‘டூரிஸ்ட் பேமிலி’ மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் அபிஷன் ஜீவிந்த். அதைத் தொடர்ந்து ‘வித் லவ்’ படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். அவர் எப்போது மீண்டும் படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, […]

தாய்லாந்து பயிற்சி… கேரளா படப்பிடிப்பு: ‘மைசா’ அதிரடி அப்டேட் கொடுத்த ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ‘மைசா’ (Maisa) திரைப்படத்தின் முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு கேரளாவில் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. பழங்குடியின பின்னணியில் ஆக்‌ஷன் த்ரில்லர் அறிமுக இயக்குநர் ரவீந்திர புள்ளே இயக்கும் இத்திரைப்படம், கோண்ட் பழங்குடியினரின் வாழ்வியலையும் அவர்களின் உலகத்தையும் மையமாகக் கொண்ட ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாகும். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில் ராஷ்மிகாவுடன் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]