மீண்டும் இணைந்த ஜூனியர் என்டிஆர் – இயக்குனர் திரி விக்ரம் கூட்டணி

மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்! இந்திய சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் வெற்றிப்பட இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அரவிந்த சமேத வீரராகவா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி, தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய […]

‘நோவா’ படத்தில் ராணுவ அதிகாரியாக தமிழில் அறிமுகமாகும் அத்விதி ஷெட்டி

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மைலோ இயக்கியுள்ள ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA: Phase One – The Arrival) திரைப்படம், ஹாரர், சயின்ஸ் பிக்ஷன், சூப்பர்நேச்சுரல் ஃபேண்டஸி மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக கன்னட நடிகை அத்விதி ஷெட்டி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் துருவா, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, […]

விரைவில் வெளியாகும் மர்மம் நிறைந்த ‘அரூபி’!

மலையாளத்தில் உருவாகியுள்ள திகில்-மர்மத் திரைப்படமான ‘அரூபி’யின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. “சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வரியுடன் தொடங்கும் டிரெய்லர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தை விறுவிறுப்பாக வெளிப்படுத்துகிறது. பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் காட்சியமைப்பு ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. […]

எந்த நாட்டுக்குப் போனாலும் பாகுபலி என்றுதான் அழைக்கிறார்கள் – பிரபாஸ்

‘பாகுபலி: தி பிகினிங்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் படம் தனது வாழ்க்கையையும், உலகளாவிய அடையாளத்தையும் எவ்வாறு மாற்றியது என்பது குறித்து நடிகர் பிரபாஸ் மனம் திறந்து பேசியுள்ளார். “Baahubali: The Torch Bearer” வெளியீட்டை முன்னிட்டு அளித்த பேட்டியில், உலகின் பல நாடுகளில் மக்கள் தன்னை பெயரால் அல்ல, ‘பாகுபலி’ என்றே அடையாளம் கண்டு அழைப்பதாக அவர் பகிர்ந்துகொண்டார். “இத்தாலியில் கூட மக்கள் என்னைப் பார்த்து ‘பிரபாஸ்’ என்று அழைத்திருக்கிறார்கள். பெருவுக்கு […]

இந்தக் காலத்தில் நம்மைப் பற்றி நாமேதான் சொல்லிக் கொள்ள வேண்டும்: நடிகர் சித்து பேச்சு!

கோதை என்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி இயக்கியுள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. தொலைக்காட்சி நடிகர் சித்து கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். “A Sidhu Investigation” என்ற டேக்லைனுடன் இப்படம் ஜூலை 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா […]