இளையராஜா பாடலை ஜி.வி. பிரகாஷ் பயன்படுத்த தடை

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ பாடலை அனுமதியின்றி மாற்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாடல் பயன்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் […]

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ.38 லட்சம் மோசடி முயற்சி!

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தை குறிவைத்து ரூ.38 லட்சம் மோசடி முயற்சி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஒருவரின் வாட்ஸ்அப் டிஸ்ப்ளே ப்ரொஃபைல் (DP)-ஐ போலியாக பயன்படுத்தி, வட மாநிலத்தைச் சேர்ந்த சைபர் கிரைம் கும்பல் இந்த மோசடி முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன ஊழியரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு, தயாரிப்பாளர் போல பேசி ரூ.38 லட்சம் பணம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடி முயற்சியைத் […]

“இனிமேல் என் பாதை நேர்மையானது தான்… குறுக்கு வழிக்கு இடமில்லை!” – நடிகர் விஷால்

நடிகர் விஷால் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த நிகழ்வில் பேசிய உரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது அவர் கூறியதாவது: “என்கிட்டயும் தவறுகள் இருக்கு… அதை நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த வயசிலும், பல ஆண்டுகள் சினிமாவில் இருந்த அனுபவத்துடன் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இது குற்ற உணர்ச்சியால் சொல்வது இல்லை, பொறுப்புடன் சொல்கிறேன். இனிமேல் நாம் செல்லும் பாதை சாதாரண பாதை அல்ல… அது நேர்மையான பாதை. அதில் […]

காதலியை கரம் பிடித்த அமீர்கான்!

பாலிவுட்டின் ‘மிஸ்டர் பெர்ஃபெக்ட்’ என்று அழைக்கப்படும் முன்னணி நடிகர் ஆமிர் கான் (61), தனது காதலியான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள இல்லத்தில் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார். இது ஆமீர் கானின் மூன்றாவது திருமணமாகும். சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட புரோமோஷன் நிகழ்வில் பங்கேற்றிருந்த ஆமிர் கான், தனது திருமணத் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தார். “ஜூலை 5-ஆம் தேதி என் திருமணம் நடைபெறுகிறது. வீட்டிலேயே எளிய முறையில் நடத்துகிறோம். இரு குடும்பத்தினரும், […]