அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஃபேன் பாய் சம்பவமாகவே இந்த படம் இருந்தது என்றே சொல்லலாம்.
அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் பல்வேறு இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டது ஆனால் மீண்டும் ஆதிக் தான் இந்த படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாக இருந்தது தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவலும் வெளியாகி உள்ளது.
அதாவது அஜித்துக்கு ஜோடியாக இந்த படத்தில் ருக்மணி வசந்த் நடிக்கப் போவதாகவும், லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான சுவாசிக்கா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது இது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.