கணவருடன் பார்ட்டியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே.
தனது நீண்ட கால நண்பரை காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பட வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மினுமினுக்கும் உடையில் கணவருடன் சேர்ந்து பார்ட்டிக்கு சென்று என்ஜாய் செய்துள்ளார்.
அந்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.