வெற்றிமாறன் தயாரிப்பில், கருணாஸின் மகன் கென் ஹீரோவாக அறிமுகம்?

விடுதலை படம் மூலம் சூரி ஹீரோ ஆனார். அதுபோல, கருணாஸின் மகனும் ஹீரோ ஆகிறார். இது பற்றிய தகவல்கள் வருமாறு:

நடிகர் கருணாஸ், பாடகி கிரேஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கென் என்கிற மகனும் உள்ளார்.

சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த கென் கருணாஸை, தனது திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து வந்தார் கருணாஸ்.

இதையடுத்து, கென் கருணாஸுக்கு, ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்தார் கென். தொடர்ந்து, விடுதலை 2-ம் பாகத்தில் நடித்திருந்தார். படத்தின் அவர் வரும் காட்சிகள் சில நிமிடங்களே இருந்தாலும் அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

இந்நிலையில், கென் கருணாஸ் விரைவில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்க உள்ளார்.

இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்க உள்ளார். இப்படம், ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

அதாவது, மலையாளத்தில் ஹிட்டான ஆலப்புழா ஜிம்கானா என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் கென் கருணாஸ் ஹீரோவாக உள்ளதாக கூறப்படுகிறது.

‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்குவதற்கான பணியில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் இறங்கியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், தற்போது ‘மனுசி’ என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. அதில் ஆண்ட்ரியா நாயகியாக நடித்துள்ளார்.

karunas son ken debut as hero in vetrimaaran production
actor karunasdirector vetrimaranviduthalai movieஅசுரன்ஆண்ட்ரியா