காஞ்சனா 4 படத்தில் விஜய் பட நடிகை நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர்,நடிகர்,இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ்.இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் காஞ்சனா.
அதனை தொடர்ந்து காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 என வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.மேலும் காஞ்சனா 4க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே காஞ்சனா 4 குறித்து அவரிடம் கேட்டபோது ஸ்கிரிப்ட் வொர்கில் இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது இந்த பாகத்தில் பேயாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் விஜயுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தளபதி 69 படத்தில் நடித்த வருகிறார். இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.