Browsing category

Tamil News

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணி நிறைவு

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slum Dog: 33 Temple Road) திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. பூரி கனெக்ட்ஸ் (Puri Connects) நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரித்துள்ள இப்படம், ஏற்கெனவே வெளியான விளம்பரக் காணொளிகள் மற்றும் முன்னோட்டங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

ஜெயிலர் 2 இரண்டாவது நாள் வசூல் தெரியுமா?

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,200 திரையரங்குகள் உள்பட உலகம் முழுவதும் சுமார் 14,000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. படம் வெளியானது முதலே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பல்வேறு திரையரங்குகளிலும் ரசிகர்களின் கொண்டாட்டம் […]

தேனிசைத் தென்றல் தேவா மறைவு: முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், கானா பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான தேனிசைத் தென்றல் தேவா மறைவுக்கு, தமிழக முதல்வர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தேவாவின் மறைவுச் செய்தி தமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் ரசிகர்களைக் கவர்ந்தவர் […]

திருமணத்துக்குப் பிறகும் கவர்ச்சியாக நடிக்கலாம்.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்

திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கக் கூடாது என்ற எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், “திருமணம் என்பது நடிகைகளின் திறமைக்கும், நடிப்புப் பயணத்துக்கும் தடையாக இருக்கக் கூடாது. திருமணத்துக்குப் பிறகு கவர்ச்சியாக நடிக்கக் கூடாது என்று எந்தச் சட்டமும் இல்லை. கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை. ஆனால், அதற்கும் ஓர் எல்லை இருக்க வேண்டும். எனது திரைப்பயணத்தில் நான் தெளிவாகவும், கவனமாகவும் செயல்பட்டு வருகிறேன். […]

முதல் நாளிலேயே உலகளவில் ரூ.125 கோடி வசூலித்ததா ஜெயிலர் 2?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், முதல் நாளிலேயே உலகளவில் ரூ.125.25 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் ரூ.70.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.55 கோடியும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் நாளில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, வார இறுதிக்குள் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.200 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த வசூல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

துர்க்கை அம்மனுக்காக வாரத்தில் 3 நாட்கள் விரதம் இருக்கிறாரா தமன்னா?

நடிகை தமன்னா சமீபகாலமாக ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வரும் அவர், துர்க்கை அம்மனுக்காக வாரத்தில் மூன்று நாட்கள் விரதம் இருப்பதாகவும், சில நேரங்களில் காலை உணவைத் தவிர்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமன்னாவின் இந்த ஆன்மிக ஈடுபாடு தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. அவரது திடீர் ஆன்மிகப் பயணத்துக்குப் பின்னால் ஏதேனும் சிறப்புக் காரணம் இருக்கிறதா? அல்லது அவர் தனது ரசிகர்களுக்கு ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளாரா? எனப் […]

400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்த ராஷ்மிகா மந்தனா!

நடிகை ராஷ்மிகா மந்தனா, ‘ப்ராஜெக்ட் அன்னபூர்ணா’ என்ற புதிய தொண்டு முயற்சியின் மூலம் 400 ஏழைக் குடும்பங்களுக்கு ஓராண்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ராஷ்மிகா மந்தனா மற்றும் அவரது கணவர் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்துள்ள ‘ரணபலி’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ள இப்படம், 1870-களில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் பின்னணியில் உருவாகியுள்ளது. இதில் ராஷ்மிகா […]

தனுஷ் பட வாய்ப்பு கிடைத்தது எப்படி? – நடிகை ப்ரீத்தி முகுந்தன்

சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகை ப்ரீத்தி முகுந்தன், தற்போது கோலிவுட்டில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில், ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷுக்கு ஜோடியாகப் புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணம், கதைகளைத் தேர்வு செய்யும் விதம் மற்றும் சினிமா அனுபவங்கள் குறித்து ப்ரீத்தி முகுந்தன் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு படத்தில் […]

கருணாஸ் – வெற்றி இணைந்து மிரட்டும் கிரைம் திரில்லர் “ரேவன்”

பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரேவன்’. இப்படத்தின் தொடக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர்கள் கருணாஸ் மற்றும் ‘8 தோட்டாக்கள்’ வெற்றி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வாணி போஜன், அனுமோல், ரவீணா, விஷ்வமித்ரன், ‘ராட்சசன்’ வினோத் சாகர், சரவணன் ஷக்தி, சுபத்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சேதுராஜன் ராஜகோபால் மற்றும் […]

ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனுஷின் ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கான முன்னோட்டமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இருப்பினும், தனுஷ் […]