Browsing category

Tamil News

வரலாற்றுப் படம் ‘சாவா’ கலெக்‌ஷன் மாஸ்: படக்குழுவினர் உற்சாகம்

ராஷ்மிகா நடித்துள்ள ‘சாவா’ திரைப்பட கலெக்‌ஷன் பற்றிப் பார்ப்போம்.. பாலிவுட் சினிமாவில் லட்சுமண் உட்டேகர் இயக்கத்தில் விக்கி கெளஷல்-ராஷ்மிகா மந்தனா நடித்த வரலாற்றுப் படம் ‘சாவா’ பாக்ஸ் ஆபிஸில் மாஸ் வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் படத்தின் 6-வது நாள் வசூல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்கி கவுசல், சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். ராஷ்மிகா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். படத்தை, 130 கோடி பட்ஜெட்டில் தினேஷ் விஜன் தயாரித்துள்ளார். தற்போது இப்படம் 6-வது […]

கெட்ட பையன் சார் இந்த காளி: இயக்குனர் செல்வராகவன் பதிவு

வலைத்தளங்களில் வாழ்வியல், தத்துவம், போதனை என அவ்வப்போது பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது வெளியிட்டுள்ள தகவல் காண்போம்.. இயக்குனர் செல்வராகவன் ரஜினியின் ‘முள்ளும் மலரும்’ படத்தின் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இது பற்றிப் பார்ப்போம். செல்வராகவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், ‘ஒரு கையை இழந்த நிலையில் ரஜினி சரத்பாபுவிடம் பேசுவதாக அமைந்த காட்சிகளை பதிவிட்டுள்ளார். இரண்டு கை, இரண்டு கால்கள் இல்லை என்றாலும் பிழைத்துக் கொள்வான், கெட்ட பையன் சார் இந்த காளி’ என்று ரஜினி கூறுவதாக […]

டிஆர்பி யில் முதல் இடத்தை பிடித்த மூன்று முடிச்சு.. இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல் என்னென்ன?

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்குள் டிஆர்பியில் போட்டி அதிகமாக இருக்கும். வார வாரம் டாப் 10 இடம் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தொடர்ந்து சில வாரங்களாக முதலிடத்திலிருந்து வந்த சிங்க […]

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்துக்கு காரணம் நானா?: நடிகை திவ்யபாரதி விளக்கம்

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவு தொடர்பாக, நடிகை திவ்யபாரதி கூறிய விளக்கம் பார்ப்போம்.. ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி விவாகரத்துக்கு காரணம் ‘பேச்சிலர்’ பட நடிகை திவ்யா பாரதி என கூறப்பட்டது. இந்த விஷயத்துக்கு, ஜி.வி. பிரகாஷ் தரப்பில் இருந்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது. ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும், தொடர்ந்து இசை நிகழ்ச்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டு வெளிநாட்டில் நடந்த ஜிவியின் ம்யூசிக் கான்சர்ட்டில், சைந்தவி தன் மகளுடன் பங்கேற்றார். இதை தொடர்ந்து இருவரும் மீண்டும் மனம் மாறி […]

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா..குவியும் லைக்ஸ்..!

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரின் எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து […]

சமுத்திரக்கனி உடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிக்பாஸ் தீபக் மற்றும் முத்துக்குமரன்..!

சமுத்திரகனியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிக்பாஸ் முத்துக்குமரன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். டைட்டில் வின்னராக முத்துக்குமரனும்,ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் போட்டியாளர்கள் நட்பு ரீதியாக அனைவரிடமும் பழகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக முத்துக்குமரன் மற்றும் தீபக் இருவரும் […]

வணங்கான் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?முழு விவரம் இதோ.!!

வணங்கான் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அருண் விஜய்.இவரது நடிப்பில் ஜனவரி 10 தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வணங்கான்.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாலா இயக்கத்திலும், ரிதா,ரோஷினி பிரகாஷ், மிஷ்கின்,சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் OTT ரிலீஸ்க்காக அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது நாளை அதாவது பிப்ரவரி 21 தேதி TENTKOTTA […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் டிராகன் திரைப்படம்.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

டிராகன் படத்தின் பிரீ புக்கிங் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில் தற்போது […]

சேலையில் ரசிகர்களை கிறங்க வைக்கும் லாஸ்லியா.. போட்டோஸ் இதோ..!

சேலையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பை பெற்றிருந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா அவ்வப்போது […]

குட் பேட் அக்லி படத்தின் டீஸர் ரிலீஸ் எப்போது தெரியுமா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

குட் பேட் அக்லி படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படம் குறித்து ஏதாவது அப்டேட் வெளியாகதா என்று ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது ரசிகர்களுக்கு […]