Browsing category

Tamil News

இந்திய சினிமா பார்க்காத விஷயத்தை அட்லி உருவாக்குகிறார்: ரன்வீர்சிங் புகழாரம்..

‘சிங் தேசி சைனிஸ்’ என்ற சீன உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரப் படம் ஒன்றை அட்லி இயக்கியுள்ளார். இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தில், சிங் நிறுவன ஏஜென்டாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலாவும் வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். இதை ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி உருவாக்கியுள்ளார். இதன் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் அட்லி, பாபி தியோல், ரன்வீர் சிங் மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் […]

தனது அடுத்த சிம்பொனி பற்றி இளையராஜா அப்டேட்..

லண்டனில் கடந்த மார்ச் 8-ம் தேதி ‘வேலியன்ட்’ என்ற தலைப்​பில் பாரம்​பரிய சிம்​பொனி இசையை அங்குள்ள ஈவென்​டிம் அப்​போலோ அரங்​கில் அரங்​கேற்​றம் செய்​தார் இளையராஜா. உலகின் மிகச் சிறந்த ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் இதை அரங்கேற்​றி​னார். அவரது இசைக் குறிப்புகளை நூற்றுக்கணக்​கான கலைஞர்​கள் பல்​வேறு இசைக் கருவி​களில் ஒரே நேரத்​தில் இசைத்தது பார்வையாளர்​களை பரவசத்​தில் ஆழ்த்தியது. இதன்​மூலம், ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்​பாளர் எனும் சாதனையை இளை​ய​ராஜா படைத்தார். […]

‘மகுடம்’ படத்திற்கு இயக்குநர் ஆனது ஏன்?: விஷால் விளக்கம்..

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’. அதன் படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே, அப்படத்தினை விஷாலே இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. படப்பிடிப்பு தளத்தில் விஷால் இயக்கும் வீடியோ பதிவு காட்சிகள் இணையத்தில் வெளியானது. தற்போது தீபாவளி தினத்தை முன்னிட்டு, ‘மகுடம்’ படத்தை தான் இயக்கி வருவதை விஷால் உறுதி செய்திருக்கிறார். இது தொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த சிறப்பான நாளில், எனது புதிய படமான […]

குறைந்த விலையில் நிறைய துணிகளை வேலவன் ஸ்டோரில் வாங்கி தீபாவளி ஷாப்பிங் செய்த எதிர்நீச்சல் ஷெரின்!

தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ் அருகில் உள்ள புத்தம் புதிய பாலத்தில் ஏறி இறங்கிய உடனே இடது பக்கத்தில் அமைந்துள்ளது வேலவன் ஸ்டோர்ஸ். டூ வீலர் மற்றும் ஃபோர் வீலர் என அனைத்தையுமே பார்க்கிங் செய்யும் இடவசதியும் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் ட்ரெயின் மற்றும் பஸ்களில் வருபவர்களுக்கும் […]

ரஜினியை பார்த்து இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை பயணம் சென்றிருக்கின்றார். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த புகைப்படங்களை பார்க்கும்போது இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாரா இவர்? என கேட்கத் தூண்டும் அளவிற்கு உள்ளது. அந்தளவிற்கு ரஜினி தன் இமேஜை மறந்து மக்களோடு மக்களாக தரிசனம் செய்து வருகின்றார். அதனைத்தொடர்ந்து ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பில் இணையவுள்ளார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜூன் மாதம் படம் வெளியாகும் என ரஜினி கூறிவிட்டார். ‘ஜெயிலர்-2’ படத்தை தொடர்ந்து கமலுடன் […]

நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ’தி பாரடைஸ்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. நானி நடிக்கும் இப்படம் அடுத்த வருடம் மார்ச் 26-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக, நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை […]

துல்கர்சல்மான் நடிக்கும் பீரியட் படமான ‘காந்தா’ அப்டேட்ஸ்

1950-களின் மெட்ராஸ் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு பீரியட் டிராமாவாக உருவாகி வரும் படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் துல்கர் சல்மான் உடன் பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபரர் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இந்நிலையில், இப்படம் வரும் நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் அண்மையில் […]

ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கிய விளம்பரப் படம், வைரல்

இயக்குநர் அட்லி, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’மூலம் இந்திக்குச் சென்றார். அந்தப் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதையடுத்து அவர், அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தை இயக்கி வருகிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில், தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘சிங் தேசி சைனிஸ்’ என்ற சீன உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரம் படம் ஒன்றை அட்லி இயக்கி வருகிறார். இதன் டீஸர் […]

நடிகர் ஆர்.கே.சுரேஷ் இயக்கும் ‘பிளைண்ட்’ திரைப்படம்

தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘எல்லம்மா’. இப்படத்தில் இசையமைப்பாளரானதேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்காக முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். தெலுங்கில் ‘பாலகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வேணு எல்டண்டி. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இணையவுள்ளார். இந்நிலையில், தமிழ் சினிமாவில் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ […]

‘ஆட்டி’ படத்தின் கதை பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்

மேதகு-பாகம் 1, சல்லியர்கள் ஆகிய படங்களைத் தொடர்ந்து தி.கிட்டு இயக்கியுள்ள படம், ‘ஆட்டி’. லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அபி நட்சத்திரா, காதல் சுகுமார், சவுந்தர், பிரவீன் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 24-ந்தேதி வெளியாகிறது. படம் பற்றி இசக்கி கார்வண்ணன் கூறும்போது, ‘இது பீரியட் கதையை கொண்ட படம். கொஞ்சம் வரலாற்றுப் பின்னணியிலும் இதன் கதை இருக்கும். சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கி இருக்கிறோம். […]