Browsing category

Tamil News

‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடிக்க கேட்டேன்: மீனாவின் நினைவலைகள்..

தன் அப்பாவின் 75-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதாவது தலைவர் பிறந்தநாளில் அவரின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்றாக படையப்பா ரீ ரிலீஸாகியிருக்கிறது. படையப்பா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படையப்பா படம் முதல் முறையாக ரிலீஸானபோது, நீலாம்பரியின் திமிரை பார்த்து கடுப்பாகி அவரை திட்டியதுடன் ஸ்கிரீன் மீது செருப்பை வீசினார்கள் ரஜினி ரசிகர்கள். ஆனால், தற்போதோ ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் என்னமா […]

பொங்கல் நாளில், சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் ரிலீஸ் ஆகுமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் ஜனவரி 23-ந்தேதி சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் ரிலீசாகலாம் என கூறப்பட்டது. இதனையடுத்து, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் ஆரம்பித்தனர். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அய்யனாராக சூர்யா இப்படத்தில் நடிப்பதால், விஎஃப்எக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜனவரியிலும் ‘கருப்பு’ வெளியாகாது என சொல்லப்படுகிறது. இதனிடையில் இந்த படத்துடைய ஓடிடி உரிமையை விற்பதற்காக படக்குழுவினர் […]

கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’ படம் ரிலீஸ் ஒத்திவைப்பு..

கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் உருவாவதாக இருந்த ‘கைதி-2’ படம் மேலும் தாமதமாகி உள்ளது. இது குறித்து இயக்குநர் லோகேஷ், கார்த்தி இருவரும் தெளிவான தகவல் தரவில்லை. இந்நிலையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ படம் வருகிற 12-ந்தேதி திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன், ‘எங்களை மீறிய சில எதிர்பாராத சூழ்நிலையால் ‘வா வாத்தியார்’ திட்டமிட்ட தேதியில் வெளியாகாது. இது மிகவும் […]

ரஜினி பிறந்தநாள்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்துச் செய்திகள்..

‘ஆறிலிருந்து அறுபதுவரை’ படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், இந்திய திரையுலகில் உச்ச நடிகர்களில் ஒருவராக, தற்போது தனது திரைப் பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கூலி, ஜெயிலர்-2 என கலைப் பயணத்தை செம எனர்ஜியாய் சூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி: ’75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் […]

சினேகாவிடம் கேள்வி கேட்டவருக்கு, பிரசன்னா செல்ல மிரட்டல்..

சுசி.கணேசன் இயக்கிய ‘விரும்புகிறேன்’ படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் சினேகா. கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு, ‘புன்னகை அரசி’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். சினேகா, முன்னணி நடிகையாக இருந்தபோதே, நடிகர் பிரசன்னாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிள்ளைகள் பிறந்ததற்கு பிறகு சினிமா பக்கம் வராமல் இருந்த சினேகா, டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். விஜய்யுடன் வசீகரா, தி கோட் ஆகிய படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தார். மேலும், புடவை தொழிலிலும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட […]

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2’ கதை தயார்: இயக்குநர் பொன்ராம்..

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் எஸகே நடிக்கவுள்ளார். இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘கொம்புசீவி’ படம் வருகிற 19-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இச்சூழலில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ குறித்து பேசியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். இது இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொன்ராம் தெரிவிக்கையில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ 2-ம் பாகத்துக்கான […]

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் விற்பனையில் சிக்கல்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படம் ஜனவரி 14-ந்தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் மற்ற உரிமைகள் நல்ல தொகைக்கு விற்பனையானாலும் இன்னும் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை மட்டும் இழுபறியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமாக இப்படத்தில் ஹிந்தி திணிப்பு பற்றிய கதைக்களம்தான் என சொல்லப்படுகிறது. ஹிந்தி திணிப்பு பற்றிய உண்மை சம்பவங்களை பேசும் படம் என்பது அனைவரும் அறிந்ததே. ஹிந்தி திணிப்பிற்கு எதிராக […]

‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்கிறீர்களா?: சந்தானம் குதர்க்கமான பதில்..

சந்தானம் நடிப்பில் கடைசியாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கிரைம் திரில்லர் கதையம்சத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக நாவலாசியர் ராஜேஷ் குமாரை சந்தித்து படக்குழுவினர் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து சந்தானம் தெரிவிக்கையில், ‘அதென்ன கள்ளக்காதலா, மறைத்து விட்டு செய்வதற்கு. எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லி விட்டுத்தான் செய்வேன்’ என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். […]

கைதி-2 ஒரு கேள்விக்குறி: லோகேஷ் மீது கார்த்தி அதிருப்தி

‘வா வாத்தியார்’ படத்தின் புரமோஷனின்போது கார்த்தியிடம் கைதி-2 படம் எப்போது தொடங்கும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது ‘விரைவில்.. விரைவில்’ என்று மட்டும் பதிலளித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ’எனக்கு ஒரே ஒரு அப்டேட் பற்றி மட்டும் தெரியாது. அது ’கைதி 2” என பதிலளித்துள்ளார். இந்தப் பதிலின் மூலம் லோகேஷ் கனகராஜ் மீது கார்த்தி அதிருப்தியில் உள்ளாரோ என நெட்டிசன்ஸ் கருதுகின்றனர். இதனால் மீண்டும் எல்.சி.யூ படங்கள் நடக்குமா, ‘கைதி 2’ தொடங்கப்படுமா என்பது […]

2026-ம் ஆண்டு சூர்யாவுக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையுமா?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் இடம் பெற்ற God Mode என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படம், ஆன்மீகம் மற்றும் ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. சூர்யா கருப்பு மற்றும் சரவணன் என்று இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், சூர்யா உடன் இணைந்து த்ரிஷா, நட்டி என்ற நடராஜன், சுவாஷிகா, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஆர் ஜே […]