Browsing category

Tamil News

ஆறுபடையப்பன் ரஜினி; ஏழு படையப்பன் டோனி: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘படையப்பா’ படம் ரீ ரிலீஸானது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த இப்படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில், ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது, வெளிநாடுகளிலும் ரீ-ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர். மேலும், திரையுலகில் ரஜினி நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில் […]

மலேசியாவில் அஜித்துடன் ஆதிக் சந்திப்பு; நடிகை ஸ்ரீலீலா ‘செல்ஃபி..’

அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வரும் அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அப்போது அங்கு நடிகை ஸ்ரீலீலாவும் இருந்துள்ளார். அவர் அஜித்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் ஸ்ரீலீலா AK64 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறாரா? இல்லை வேறேதும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்பது அறிவிக்கப்படவில்லை. அதேபோல், லப்பர் பந்து புகழ் ஸ்வாசிகா மற்றும் ரெஜினா ஆகியோர் முக்கியமான ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. இச்சூழலில், […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீசர் ரிலீஸ் எப்போது?

விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா வழக்கமாக சென்னையில் நடைபெறும் நிலையில், அவரின் கடைசிப் படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ இசை விழா மலேசியாசில் வரும் 27-ந்தேதி நடைபெறவுள்ளது. விழாவில் விஜய் படங்களின் பாடல்கள் பாடப்பட்டு, கான்செர்ட் ஒன்றும் நடைபெற இருக்கிறது. இப்படம், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தை தமிழுக்கேற்ப மாற்றங்களுடன் ஹெச்.வினோத் இய்க்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் […]

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா?

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ வெற்றிக்கு பிறகு, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘பராசக்தி’ படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா. இப்படத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லன் அவதாரம் எடுத்துள்ளதால், திரையில் அவரைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். மேலும், இப்படத்தில் அதர்வா, ராணா, ஸ்ரீலீலா மற்றும் பாசில் ஜோசப் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படமாகவும் ‘பராசக்தி’ உருவாகியுள்ளது. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவது சிங்கிளும் ரிலீசாக உள்ளது. […]

சாந்தனு நடிக்கும் ‘மெஜந்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

திரையுலகில் வாரிசு நடிகர்கள் வருவது இயல்பு. அதில் தனித்திறமையுடன் நிற்பவர்கள் குறைவு. இது தொடர்பான தகவல் பார்ப்போம்.. கே.பாக்யராஜின் மகன் சாந்தனு ‘சக்கரைகட்டி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் வெற்றிகண்ட சாந்தனு, சில படங்களில் தோல்வியும் சந்தித்து வந்தார். சாந்தனு நடிப்பில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படம் வரவேற்பை பெற்றது.பின்னர் வெளியான ‘இராவண கூட்டம்’ படமும் கவனத்தை ஈர்த்தது. தற்போது, பரத்மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர் ஆகியோர் […]

’29’ என்ற படத்தின் கதைக்களம் என்ன?: இயக்குநர் ரத்னகுமார் விளக்கம்..

29 என்ற படத்தின் கதைக்களம் பற்றிப் பார்ப்போம்.. ‘மேயாதமான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரத்னகுமார், அடுத்து ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களை இயக்கினார். இப்போது அவர் இயக்​கியுள்ள படத்​துக்கு ‘29’ என்று டைட்​டில் வைத்துள்ளனர். இதில் விது, ப்ரீத்தி அஸ்​ராணி, அனுஸ்ரீ வேகன், ஸ்ரே​யாஸ் பாத்​திமா உள்​பட பலர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்​கம் ஒளிப்​ப​திவு செய்​திருக்​கும் இந்​தப் படத்​துக்கு ஷான் ரோல்​டன் இசையமைத்துள்​ளார். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்​ஸ், ஜீ ஸ்கு​வாட் நிறுவனங்​கள் சார்​பில் கார்த்​தி​கேயன், இயக்குநர் லோகேஷ் […]

கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்; மாரிசெல்வராஜ் ‘கிளாப்’ அடித்து தொடக்கம்..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் கவுதம் கார்த்திக் அறிமுகமாகி, தன் அடுத்தடுத்த படங்களில் மினிமம் பட்ஜெட் நாயகனானார். அவ்வகையில் வை ராஜா வை, ரங்கூன், ஆகஸ்ட் 16 ,1947, உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றிப்படமாகின. இதற்கிடையே, நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்துகொண்டார். தற்போது கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. […]

திரையுலகில், தனுஷ் நிகழ்த்தியுள்ள புதிய சாதனை..

தமிழ் சினிமாவில், பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். அவர் இயக்குநராக அறிமுகமான ‘ராயன்’ படம் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது. தெலுங்கிலும் ‘குபேரா’ படத்தில் நடித்து தனுஷ் சாதனை படைத்தார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த இப்படம் தமிழிலும் வெளியாகி இருந்தாலும், நேரடி தெலுங்கு படமாகும். இப்படத்தில் தன் அசாத்திய நடிப்பு திறனை மேலும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருந்தார் தனுஷ். அப்படம் தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்ற போதும் தெலுங்கு […]

இல்லற வாழ்க்கை ஓராண்டு நிறைவு: கீர்த்தி சுரேஷின் குறும்பு வீடியோ வைரல்..

திருமணத்திற்கு பிறகும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அவரும் தொடர்ந்து நடித்து வசீகரித்து வருகிறார். தற்போது நயன் நடிப்பில் சுந்தர்.சி இயக்கும் ‘பொட்டு அம்மன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு தனது நண்பர் ஆண்டனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோவை கீர்த்தி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், தனது திருமண நினைவுகளையும், தனது நினைவுகளையும், தனது கணவர் ஆண்டனியுடன் […]

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை: பிரபல நடிகை மேல்முறையீடு..

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்தது. அங்கிருந்த நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது. இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு போலீசார் விசாரித்து பல்சர் சுனில் என்கிற சுனில்குமார் என்பவர் உள்பட சிலரை போலீசார் […]