Browsing category

Tamil News

2027 புத்தாண்டு ரிலீஸாக பகத் பாசில் – பிரேம்குமார் கூட்டணியின் ‘அசரீரி’

‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பிரேம் குமார், அடுத்ததாக மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசிலுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ‘அசரீரி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார். திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் ஃபஹத் ஃபாசிலுக்கு ஜோடியாக ஷிவதா நடிக்கிறார். மேலும், […]

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்தின் இறுதி டிரைலர் வெளியீடு!

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தின் புதிய டிரெய்லர், ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முன்னணி சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, சக்திவாய்ந்த வில்லனான டாக்டர் டூமை எதிர்கொள்ளும் காட்சிகள் இறுதி டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் எனப் பல்வேறு சூப்பர் ஹீரோ […]

நடிகர் சரத்குமாரின் 177-வது படம் ‘டாக்ஸி’

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பெர்ஜெயா குழுமம் மற்றும் ரேடான் மீடியா வொர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெயினராக உருவாகிறது. இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் திரைத்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஆலோசகரான டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வின்சென்ட் […]

ராமாயணா படத்திற்காக 12 திரைப்பட வாய்ப்புகளை நிராகரித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ரன்பீர் கபூர் நடிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்திற்காக, சுமார் 10 முதல் 12 திரைப்படங்களின் இசையமைக்கும் வாய்ப்புகளை நிராகரித்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், ஜெர்மன் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக ‘ராமாயணா’ படத்தின் இசைப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், இப்படத்தில் இடம்பெறும் ‘ராவண தாண்டவம்’ இசைக்கோர்வையை இறுதி செய்வதற்கு முன்பாக 12 […]

ரஜினியிடம் அடிக்கடி கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்த ராஷி கண்ணா

‘தர்மன்’ படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் நிறைய நேரம் செலவிடுகிறேன். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பரைப் போல மாறிவிட்டார். அடிக்கடி அவரிடம் பல கேள்விகளைக் கேட்டு தொந்தரவு செய்வேன். ஆனால், அவர் அனைத்துக் கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாகப் பதிலளிப்பார். அவர் அருகில் இருக்கும்போது என்னை ஒரு குழந்தையைப் போல உணர்கிறேன். ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் இருப்பதை மிகவும் ரசித்து வருகிறேன். ஒரு சாதாரண ரசிகையைப் போலவே நானும் இப்படத்தைத் திரையில் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன்” என நடிகை ராஷி […]

முகேன் ராவ் – ப்ரீத்தி அஸ்ராணியின் நிறம் பட ரிலீஸ் அப்டேட்!

முகேன் ராவ் நடிப்பில் மருத்துவத் துறையில் நடைபெறும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. K Square Cinemas தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ளார். ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ், ஸ்னேகா குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். […]

பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் சிறந்தது – சமீரா ரெட்டி ஓபன் டாக்

தென்னிந்தியத் திரையுலகில் பணியாற்றிய காலம் தனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பானது என நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், “ஒவ்வொருவருக்கும் திரையுலகில் வெவ்வேறு அனுபவங்கள் இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரை பாலிவுட்டை விட தென்னிந்தியத் திரையுலகம்தான் சிறந்தது. எனக்கு அதிக மரியாதை, சம்பளம், புகழ் என அனைத்தும் தென்னிந்தியத் திரையுலகில்தான் கிடைத்தன. 18 ஆண்டுகள் கடந்த பிறகும் ரசிகர்கள் என்னை ‘மேக்னா’ என்றே அழைத்து அன்பு காட்டி வருகின்றனர். ரசிகர்களின் அந்த […]

அன்புதான் இறுதியில் வெல்லும்! ஷாருக்கான் நெகிழ்ச்சி பேச்சு

அன்புதான் இறுதியில் வெற்றி பெறும்… அமைதி ஒவ்வொருவரின் இதயத்திலிருந்தும் தொடங்க வேண்டும்! என நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். குளோபல் பீஸ் ஹானர்ஸ் (Global Peace Honours) நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், வன்முறைக்குப் பதிலாக உரையாடலையும், பயத்திற்குப் பதிலாக நம்பிக்கையையும் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழ முடிவு செய்தால், இறுதியில் அன்புதான் வெற்றி பெறும். அமைதி என்பது வெளியில் தேட வேண்டிய ஒன்றல்ல; அது ஒவ்வொருவரின் இதயத்திலிருந்தும் […]

ரஷ்மிகாவின் மைசா ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

நடிகை ரஷ்மிகா மந்தனா நடிப்பில், ரவீந்திர புள்ளே இயக்கியுள்ள திரைப்படம் ‘மைசா’ (Mysaa). இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்படுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்குத் திரையுலகம் தொழில்நுட்ப ரீதியாகவும், திரை அனுபவத்திலும் தொடர்ந்து புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது. அந்த வரிசையில், ‘மைசா’ திரைப்படத்தைத் தனித்துவமான ஆக்‌ஷன் படைப்பாகவும், பிரம்மாண்டமான […]

ஹனுமான் 2 டைட்டில் போஸ்டர் வெளியீடு!

‘ஹனு-மேன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இளம் நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இதன் டைட்டில் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் Vi. ஆனந்த் இயக்குகிறார். புராணம், கற்பனை மற்றும் பிரம்மாண்டமான சாகசங்கள் நிறைந்த ஃபேண்டஸி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டரில், மேகங்களுக்கு மேலே […]