Browsing category

News

தில்லுமுல்லு வேடத்தில், சாமியாராக மாறி நாட்டையே உருவாக்கிய நட்டி நட்ராஜ்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, இன்று வெளியான ‘கம்பி கடன் கதை’ பற்றிய தகவல் பார்ப்போம்.. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கிய முதல் படமான ‘சதுரங்க வேட்டை’ படத்தில் ஹீரோவாக நடித்த நட்டி நட்ராஜ் அனைவரையும் ஈர்த்தார். தற்போது ஹீரோவாகவும் துணை நடிகராகவும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் சீன ரசிகர்களையே கண் கலங்க வைத்தது. அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது அசத்தலான நடிப்பால்  நட்ராஜ் அதிரடி காட்டியிருந்தார். இந்நிலையில், […]

சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்: பரபரப்பு; போலீஸ் விசாரணை

மும்பை வொர்லியில் உள்ள போக்குவரத்து துறைக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜில், நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான் கானின் கார் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்றும் சல்மானை கொலை செய்வோம் என்றும் அந்த மெசேஜில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சல்மான் கானுக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் மிரட்டல்கள் வந்துள்ளன. 1998-ம் ஆண்டு மான் வேட்டை வழக்கில் சல்மான் கானை குறிவைத்து […]

‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவின் என்ரி சீன் என்ன தெரியுமா?

தமிழரின் பண்பாடு நிறைந்த, வீரம் செறிந்த விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதனை உலகுக்கு ஓங்கி உரைப்பதே ‘வாடிவாசல்’ எனலாம். சி.சு.செல்லப்பா எழுதிய குறுநாவல் ‘வாடிவாசல்’ ஆகும். இதனை திரைப்படமாக உருவாக்கும் பணியில் வெற்றிமாறன் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளார். சூர்யா நடிக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். அவ்வகையில் ‘வாடிவாசல்’ டெஸ்ட் ஷூட் முடிந்து, லண்டனில் சிஜி தொடர்பான பணிகள் நடப்பதாக அறிவித்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். தயாரிப்பாளர் தாணுவும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், விடுதலை […]

ரோபோ சங்கர் நடித்த ‘அம்பி’ பட சிறப்பம்சம் என்ன?: இயக்குனர் பாஸர் ஜே எல்வின் வாய்ஸ்

தமிழ் சினிமாவில், இயக்குனர் பி.வாசுவின் மகன் நடிப்பில் ‘ஏதோ செய்தாய் என்னை’ மலையாளத்தில் பிரதீஷ் நடிப்பில் ‘ரூல் நம்பர்-4’ ஆகிய படங்களை இயக்கியவர் எல்வின். இவர் தற்போது ‘ரோபோ’ சங்கர் நடிப்பில் 3-வதாக தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அம்பி’. இவர், இப்படத்திற்கான புரொமோஷன் பணியில் இருந்த நிலையில் கூறியதாவது: தாணு அவர்கள் தயாரிப்பில், சிலம்பரசனின் நடிப்பில், வி.இசட். துரை இயக்கிய ‘தொட்டி ஜெயா’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது, தயாரிப்புத் துறையின் மீதும் எனக்கு ஈடுபாடு இருந்தது. […]

தமிழ்ப் புத்தாண்டான இன்று, சிம்பு வெளியிட்ட STR49 படத்தின் அப்டேட்

அனிருத் இல்லன்னா என்ன? பாத்துக்கலாம்.. என தொனியில் சிம்பு வெளியிட்டுள்ள தகவல் பற்றிப் பார்ப்போம்.. கமல்ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் சிம்புவின் 48-வது படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். படத்தின் டீசரில் சிம்புவின் கெட்டப் வரவேற்பு பெற்றுள்ளது. இதனையடுத்து, அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் படங்களிலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். […]

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு..!

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பட குழு இன்று […]

வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு.!!

வாடிவாசல் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். தற்போது சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற […]

“சாணி” திரைப்பட துவக்க விழா – பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது.

14 ஏப்ரல் 2025, டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், கருங்குழி கிராமத்தில் நடைபெற்றது. மருது புரொடக்ஷன் தயாரிப்பில், சி. மோகன்ராஜ் எழுதி இயக்கும் மற்றும் மருது பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் “சாணி” என்ற திரைப்படத்தின் பூஜை, அந்த கிராமத்தில் அமைந்துள்ள CSI பெண்கள் தொடக்கப் பள்ளியில் கல்வித் தலைவர்களாகிய டாக்டர்.அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர்.முத்துலட்சுமி, பெருந்தலைவர் காமராஜர் […]

இந்திய சினிமாவின் மைல்கல், மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2 !!

இன்று கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு நாள். இந்த திரைப்படம் வெளியான போது, மிகப்பெரிய சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், இந்திய ஆக்‌ஷன் சினிமாவின் வரலாற்றைவே மாற்றியது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்க, மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்தார். மிக அழுத்தமான கதையுடன், உலகத் தரமான ஆக்‌ஷன் காட்சிகள், கண்ணுக்கு விருந்து […]

STR 49 : தமிழ் புத்தாண்டு வாழ்த்துடன் அப்டேட் கொடுத்த சிம்பு..வைரலாகும் பதிவு..!

தமிழ் புத்தாண்டு வாழ்த்துடன் எஸ்.டி.ஆர் 49 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் சிம்பு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் எஸ்.டி.ஆர் 49 படம் குறித்த அப்டேட் […]