Browsing category

News

இந்தியாவின் முதல் மொட்டோகிராஸ் படம் ‘பைக்கர்’

முன்னணி நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி உள்ளிட்டோர் நடித்துள்ள “பைக்கர்” திரைப்படம், இந்தியாவின் முதல் மொட்டோகிராஸ் (Bike Sports) திரைப்படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ள இப்படம், UV Creations தயாரிப்பில் விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர். பான் இந்திய அளவில் உருவாகியுள்ள இந்த படம், தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 2026 ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் […]

‘கான் சிட்டி’ டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய ஃநெட்ப்ளிக்ஸ்

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. அதற்குச் சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் மிகப்பெரிய தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே கிடைத்த இந்த ஒப்பந்தம், படத்தின் மீதான ஹைப் மேலும் உயர்த்தியுள்ளது. புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி”, ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வருகிறது. நகர வாழ்க்கையில் […]

சேப்பாக்கத்தில் களைகட்டிய ‘ரோர் 26’ – பத்ரி வெங்கடேஷின் மாபெரும் மேடை நிகழ்ச்சி!

‘பாணா காத்தாடி’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சியை சிறப்பாக இயக்கி கவனம் பெற்றுள்ளார். இந்த விழாவில் எம்.எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹசி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களுடன், நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டு சிஎஸ்கே அணிக்கு தனது வாழ்த்துகளை பகிர்ந்தார். நிகழ்ச்சியை ஆர்.ஜே. பாலாஜி, அனிருத் ஸ்ரீகாந்த், அர்ஜுன் தாஸ் […]

சூர்யா – கார்த்தி இருவரும் ‘யூத்’ படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டு! புகைப்படங்கள் வைரல்

கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் திரைப்படம் மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியானதில் இருந்து நல்ல விமர்சனங்களும், ரசிகர்களின் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. தற்போது உலகளாவிய வசூலில் ரூ.30 கோடியை தாண்டியுள்ள யூத், 50 கோடி மைல்கல்லைத் தொடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி இருவரும் ‘யூத்’ படத்தைப் பார்த்துவிட்டு, மொத்த படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினர். படக்குழுவினருடன் இருவரும் […]

ரஜினியுடன் கதை விவாதம்: அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த சுவாரசியமான அனுபவம்!

‘டிராகன்’ பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து ரஜினிகாந்துடன் தனது கதை விவாத அனுபவத்தை ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். ரஜினிகாந்தின் 173வது படம் (தலைவர் 173) தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கு முன்பு பல இயக்குநர்கள் ரஜினியிடம் கதை சொல்லிய நிலையில், அஸ்வத் மாரிமுத்துவும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். அஸ்வத் மாரிமுத்து பேட்டியில் கூறியதாவது: “சிம்பு படத்துக்காக (STR 51) கதை எழுதிக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் கதையை நகர்த்த முடியாமல் […]

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான பள்ளிச்சட்டம்பி படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இந்த படம், வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என டீசர் காட்டுகிறது. வெளியான டீசர் முழுவதும் அதிரடி சண்டைக் காட்சிகளால் நிரம்பியிருக்கிறது. இது ஒரு காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஆக்ஷன் கதையாக உருவாகியிருப்பது தெளிவாகிறது. மலையாள திரையுலகை மட்டுமல்லாமல், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இந்த படம் முக்கிய இடத்தைப் பெறும் […]

சூரி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் அறிவிப்பு

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஆர். ரவிகுமார் இயக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. #சூரி07 / #மைத்ரிதமிழ்03 என அழைக்கப்படும் இப்படத்திற்கு “Blood Followed The Flood” என்ற டேக்லைன் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கின்றனர். பல மொழிகளில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை உருவாக்கி வரும் மைத்ரி நிறுவனம், தமிழில் தனது மூன்றாவது தயாரிப்பாக […]

உணர்வுகள் பேசும் வெற்றி: யோகி பாபுவின் நெஞ்சார்ந்த நன்றி!

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட கதைகளில் தன்னை நிரூபிக்கும் சிலர் மட்டுமே தமிழ்சினிமாவில் உள்ளனர். அந்த வரிசையில் தனித்துவமான இடத்தை பிடித்திருப்பவர் யோகி பாபு. பல ஆண்டுகளாக ரசிகர்களை சிரிக்க வைத்த அவர், தற்போது வலுவான கதாபாத்திரங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவரது சமீபத்திய படம் “கெணத்த காணோம்” விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டில், வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக, பல படங்களில் பிஸியாக இருந்தபோதிலும், இப்படத்திற்காக அவர் […]

தமிழக வெற்றி கழகத்தால் எந்த பாதிப்பும் கிடையாது.. நாங்கதான் ஜெயிப்போம்.. திவ்யா சத்தியராஜ் பேச்சு..!

தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக மாஸ் காட்டி வந்த விஜய் தற்போது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய அரசியலில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அடுத்த மாதம் விஜய் எலக்ஷனில் களம் காண இருக்கும் நிலையில் பல்வேறு தரப்பினர்களும் அவர்களது கருத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் DMKவின் ஆதரவாளரான திவ்யா சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது முதலமைச்சருடன் […]

சத்தமில்லாமல் அஜித் குமார் எடுத்த புதிய முயற்சி.. இந்த ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்கல..!

அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தை இவரது பேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக […]