Browsing category

News

பேண்ட் ஷர்ட்டில் விதவிதமாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்.!!

பேண்ட் ஷர்ட்டில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாஸ்டர்,மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பேண்ட் சர்ட்டில் விதவிதமாக […]

மகளின் பிறந்தநாளுக்காக தீபிகா படுகோனே செய்த விஷயம்.. வைரலாகும் தகவல்.!!

மகளின் பிறந்தநாளுக்காக தீபிகா படுகோனே செய்த விஷயம் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் தீபிகா படுகோன் ஐஸ்வர்யா படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் உள்ளார் மகள் பிறந்து தற்போது ஒரு வருடம் முடிந்த நிலையில் அவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய உள்ளனர் இந்த நிலையில் மகளான […]

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய பத்து திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகயுள்ளது.இது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து கமிட்டாகி வருகிறார்கள்.இந்த நிலையில் இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூல் தூள் கிளம்பிய திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் […]

சசி-விஜய் ஆண்டனி மீண்டும் இணையும் புதிய படம் ‘நூறுசாமி’..

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘சக்தித்திருமகன்’ படம் செப்டம்பர் 19-தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார். சமூக நீதியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஆழமான அரசியல் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வைரலாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ‘பிச்சைக்காரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சசி – விஜய் ஆண்டனி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிய முடிவு செய்தனர். இந்தப் படத்துக்கு […]

தனுஷின் ‘மறக்க முடியாத நினைவலைகள்’: வைரலாகும் நிகழ்வு..

பன்முகத்திறமையாளர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. நாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்நிலையில் முன்னதாக, நடிகர் நாசர் இயக்குநராக அறிமுகமான படம் அவதாரம். 1995-ம் ஆண்டு வெளியான அந்த படத்தில் நாசருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரேவதி. இளையராஜா இசையமைத்திருந்தார். அந்த படத்தில் வந்த ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை ஜானகியுடன் சேர்ந்து பாடினார் இளையராஜா. இளையராஜா, ஜானகி பாடிய அந்த பாடல் இன்றும் பிரபலம். […]

எங்கே செல்கிறேன்?: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்..

நடிகை திரிஷா தனது இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டாலும், போஸ்ட் போட்டாலும் அது வைரலாகி விடுகிறது. அவ்வகையில் திரிஷா ‘தான் விமானத்தில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து, எங்கே செல்கிறேன்?’ என கேட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸை நிரப்பிவிட்டார்கள். எங்கே போகிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டுவிட்டு, துபாயில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்திருக்கலாம். இல்லை, வெகேஷனுக்காக வெளிநாட்டிற்கு செல்லலாம். […]

ஆபாசமாக சித்தரிப்பு: ஐஸ்வர்யாராயை தொடர்ந்து, அபிஷேக்பச்சனும் வழக்கு..

ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து, அபிஷேக் பச்சனும் தனது படங்கள் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது பெயர், படம் மற்றும் போலி வீடியோக்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் அபிஷேக் பச்சன் வழக்கு தொடர்ந்துள்ளார். அபிஷேக் பச்சன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரவீன் ஆனந்த், அபிஷேக் பச்சனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏஐ மூலம் சிலர் உருவாக்கி வருவதாகவும், […]

நடிகர் சங்கத்தேர்தல் தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவு..

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடந்த தேர்தல் முடிவுகளின்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தலைவராக நடிகர் நாசர், பொதுச் செயலாளராக நடிகர் விஷால், பொருளாளராக நடிகர் கார்த்தி, துணைத் தலைவர்களாக பூச்சி முருகன் மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி, […]

‘மகாவதார் நரசிம்மா’ அனிமேஷன் படத்தை தொடர்ந்து ‘வாயுபுத்ரா’..

ஹனுமனின் கதையைச் சொல்லும் அனிமேஷன் படமாக ‘வாயுபுத்ரா’ உருவாகிறது. 3டி-யில் உருவாகும் இதைத் தெலுங்கு இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்குகிறார். மலைகளையே நகர்த்திய ஹனுமனின் வலிமை, ராமபிரான் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத பக்தி, நம்பிக்கை, தியாகம் ஆகியவை இந்தப் படத்தில் இடம் பெறுகின்றன. இதை சித்தாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் நாக வம்சி, சாய் சவுஜன்யா, ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கிறது. கரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்தப் படம், வரலாறும் பக்தியும் நவீன காட்சியமைப்பும் […]

நடிகை சிம்ரன் எடுக்கும் புதிய முயற்சி.. வெளியான சூப்பர் தகவல்.!!

சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார் சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கின்றன. சமீபத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை சிம்ரன் தற்போது முதல் முறையாக தயாரிப்பாளராக ஒரு படத்தை தயாரிக்க […]