Browsing category

News

அனைத்து தயாரிப்பாளர்களும் வெட்கப்பட வேண்டும்: ராம் கோபால் வர்மா பதிவு..

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. இந்தப் படம் காந்தாரா நிகழ்வுகளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ரிஷப்பைத் தவிர, இப்படத்தில் ருக்மிணி வசந்த், ஜெயராம் மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட்டில் சத்யா, ரங்கீலா போன்ற பல படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா, இப்படத்தை பாராட்டியுள்ளார். ‘ரிஷப்பின் உழைப்பைப் பார்த்து இந்தியாவின் அனைத்து […]

என் ரசிகர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்: அஜித் வாய்ஸ்..

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் குழு பங்கேற்றுள்ளது. இதனிடையே அஜித் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘வரும் ஆண்டில் நிறைய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முயற்சிக்கிறேன். எனவே, விளையாட்டுக்கும் இந்திய திரைப்படத் துறைக்கும் முக்கியத்துவத்தை தரும் ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கண்டறிய வேண்டும். ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸை ஒரு தளமாகப் பயன்படுத்த விரும்புகிறேன். சர்வதேச அளவில் நிறைய விருதுகள் வழங்கப்பட்டு விழாக்கள் […]

கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம்: விஜய் ஆறுதல்..

கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக […]

‘ஓஜி’ பட இயக்குநர் சுஜித் இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய படம்..

நானி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தகவல்கள் காண்போம்.. பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஓஜி’ படத்தின் இயக்குநர் சுஜித். இவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது நானி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதன் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு நானி – சுஜித் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள். முன்னதாக, நானி படத்தின் பணிகளை பல மாதங்களாகவே செய்து வந்தார் […]

அரசியலில் போட்டி பயங்கரமானதாக இருந்தால்தான், வெற்றி நியாயமானதாக இருக்கும்: பார்த்திபன் கருத்து..

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; ‘தற்போதைய அரசியல் சூழலில் நிறைய வசதியும், பணமும் தேவைப்படுகிறது. மனதில் வீராப்பும், நல்ல எண்ணமும் இருந்தால் கூட, அதை மட்டும் வைத்துக் கொண்டு இங்கு அரசியல் செய்துவிட முடியாது. அரசியல் என்பது வேறொரு மிகப்பெரிய களம். புதிதாக யார் வந்தாலும் அவர்களை நான் வரவேற்கிறேன் யாரோ ஒருவர் மட்டும் ஓடிச்சென்று பதக்கம் வாங்குவதற்கு பதிலாக, ஒரு பெரிய கூட்டமே […]

மம்முட்டி-மோகன்லால் இணைந்து நடிக்கும் ‘பேட்ரியாட்’ திரைப்படம் அப்டேட்ஸ்..

மம்முட்டி – மோகன்லால் இணைந்து நடித்து வரும் படத்துக்கு ‘பேட்ரியாட்’ எனப் பெயரிடப்பட்டு டீஸரை வெளியிட்டுள்ளது படக்குழு. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் புதிய படம் ஒன்றில் நடித்து வந்தார்கள். இப்படம் மலையாள திரையுலகில் பெரும் எதிர்பார்க்கப்படும் படமாக இருந்து வருகிறது. சமீபத்தில் மம்முட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இதன் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது அவர் உடல்நிலை தேறி திரும்பியிருப்பதால் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இப்படத்துக்கு ‘பேட்ரியாட்’ என பெயரிட்டுள்ளது படக்குழு. மேலும், […]

சினிமாவை கொல்லாதீர்கள்: பவன் கல்யாண் பேச்சு..

‘ஓஜி’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் ‘ஓஜி’ படத்தின் முந்தைய பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார் பவன் கல்யாண். மேலும், இப்படத்தில் ஜப்பானுக்கு சென்று சில காட்சிகளை படமாக்க இயக்குநர் விரும்பினார். ஆனால், தன்னால் முடியாமல் போய்விட்டதை நினைத்து வருந்துவதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் பவன் கல்யாண். மேலும், அவர் பேசும்போது, ‘ரசிகர்களுக்கு படத்துக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. […]

காந்தாரா 2 : தமிழகத்தில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..முழு விவரம் இதோ.!!

காந்தாரா 2 படத்தின் தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 400 கோடிக்கும் மேல் வசூலும் செய்திருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி தற்போது வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம்,குல்க்ஷன் தேவையா போன்ற […]

சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவே பிக் பாஸ் பவித்ரா.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்.!!

சூரியகாந்தி தோட்டத்திற்கு நடுவே பிக் பாஸ் பவித்ராவின் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பவித்ரா. அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்திருந்தது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். ரசிகர்கள் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் […]

நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 80 மற்றும் 90களில் நாயகனாக கலக்கியவர் சத்யராஜ். தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது,எம்ஜிஆர் விருது, பெரியார் விருது என பல விருதுகளை பெற்று உள்ளார். தற்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சமீபத்தில் கூலி,இட்லி கடை போன்ற படங்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவரின் சொத்து மதிப்பு குறித்து தகவல் […]