Browsing category

News

வெங்கட்பிரபு இயக்கவுள்ள சிவகார்த்திகேயன் படத்தின் அப்டேட்..

‘கோட்’ படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் வெங்கட்பிரபு. இப்படம் தொடர்பாக நண்பரின் வீடியோ பதிவொன்றில் வெங்கட்பிரபு, ‘சிவகார்த்திகேயனை வைத்து தான் அடுத்த படம் இயக்கவுள்ளேன். அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி விடுவோம் என நினைக்கிறேன். இதுவொரு வித்தியாசமான படமாக இருக்கும் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன் இணையும் படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் உடன் நடிக்கவிருப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட […]

தனது வெற்றிக்கு காரணம்: பிரதீப் ரங்கநாதன் விளக்கம்..

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதனிடம், ‘உங்களது வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள். கடின உழைப்பா அல்லது அதிர்ஷ்டமா? என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பிரதீப் கூறிய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘கடின உழைப்பு இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே யோசித்து வருகிறேன். அதில் எல்லாவற்றிலும் எனக்கு கிடைக்கும் அன்பு முக்கிய காரணம். என்னைப் போன்ற திறமையானவர்கள் நிறைய பேர் […]

சினிமாவில் தினமும் 8 மணிநேரம் பணி: தீபிகா படுகோன் ஆதங்கம்..

சமீபத்தில் ‘கல்கி 2989 ஏடி’ படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதற்கான காரணங்கள் என பல விஷயங்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக ‘ஸ்பிரிட்’ படத்திலும் தீபிகா படுகோன் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கான காரணங்களும் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கின. தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என்று தீபிகா கூறியதே இதற்கு காரணம் எனப் பலரும் குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக தீபிகா படுகோன் பதிலளித்துள்ளார். ‘இந்திய […]

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த பட ஹீரோ..

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு திரைப்படம் பக்கா கம்ரஷியலி்ல் உருவாகி வருகிறது. இப்படமே இன்னும் ரிலீஸாகாத நிலையில் ஓர் இயக்குனராக அவரின் அடுத்த படம் குறித்து கோலிவுட் வட்டாரம் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. அதாவது ‘கருப்பு’ திரைப்படத்திற்கு பிறகு ஆர்.ஜே பாலாஜி ‘குட் நைட்’ பட புகழ் மணிகண்டனை ஹீரோவாக வைத்து இயக்கப் போகிறார். சமீபத்தில் மணிகண்டன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி சந்தித்து கதை பற்றி பேசினர். ‘கருப்பு’ படத்திற்கு பிறகு உடனடியாக இந்த […]

ராஜமவுலி இயக்கும் ‘தாதா சாகிப் பால்கே’ பயோபிக்: ஹீரோ யார்?

‘தாதா சாகிப் பால்கே’ பயோபிக் படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ராஜமவுலி – ராஜ்குமார் ஹிரானி இருவருமே ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தினை அறிவித்தார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவானது. இதில் ராஜ்குமார் ஹிரானி படத்துக்கு மட்டுமே ‘தாதா சாகிப் பால்கே’வின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து ஆதரவு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ‘தாதா சாகிப் பால்கே’ வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார். தற்போது அதிலிருந்து அவர் விலகியிருப்பதாக […]

பிக் பாஸ் ரவீனா வெளியிட்ட புகைப்படங்கள்.. குவியும் வாழ்த்து.!

பிக் பாஸ் ரவீனா புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது டான்ஸ் வீடியோக்கள் மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது 22 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த […]

தனுஷ் 56 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!

தனுஷ் 56 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.இவர் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார் சமீபத்தில் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 56 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். […]

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணமா? வெளியான தகவல்.!!

த்ரிஷாவின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. இவர் சமீபத்தில் குட் பேட் அட்லி தக் லைஃப் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் கருப்பு,விஸ்வம்பரா போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் த்ரிஷாவின் திருமணம் குறித்து தகவல் தற்போது ஒன்று வெளியாகியுள்ளது. சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை த்ரிஷாவிற்கு […]

என்ன ஒரு வில்லத்தனம்.. கெமி பற்றி பேசும் VJ பார்வதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

கெமி பற்றி பார்வதி திவாகரிடம் சொல்லுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கம்ருதீன் ஆதிரையிடம் பேச வர உங்க கிட்ட எனக்கு பேச விருப்பம் இல்லை என்று சொன்னால் நீங்க போற டோனே சரியில்லை என்று […]

கம்ரூதின் மற்றும் ஆதிரை இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் கனி மற்றும் பிரவீன் இருவரும் கேமரா முன் நின்று நாங்க ரெண்டு பேரும் தெரிந்தே தான் உப்பு அதிகமாக போட்டு இருக்கிறோம் […]