இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அதே டாஸ்க் விளையாடும் போது சபரி பார்வதியின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறார் பர்சனல் வென்சன்ஸ் வெச்சி தான் சபரி இப்படி பண்ணுவதாக பார்வதி மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் இருவரும் வாக்குவாதம் செய்கின்றனர்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் நான் வாட்டர் மெலன் ஸ்டார் என்னோடது எடுத்து நானே வச்சிட்டேன் என்று சொல்ல கம்ருதீன் காரி துப்புகிறார். பார்வதி இது மாதிரி எல்லாம் பண்ணாத என்று சொல்ல எஃப்ஜே கோபமாக செல்ல, சபரி அவரை சமாதானம் செய்கிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.