Browsing category

News

ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் in லீலா’ படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி

ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் in லீலா ‘ படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ‘ ராம் in லீலா’ வில் இணையும் ரியோ – வர்திகா ஜோடி டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு’ […]

விஜய் நடிப்பில் ஒரு படம்: இயக்குநர் லிங்குசாமி வருத்தம்..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச். வினோத் இயக்கி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கதை இதுதான் என இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால், இப்படம் ரிலீசுக்கு முன்பாகவே வசூலில் சாதனை படைத்து வருகிறது. ‘ஜனநாயகன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படம் மற்றும் வெளியான ‘தளபதி கச்சேரி’ பாடல் ஆகியவற்றை வைத்து இது ‘பகவந்த் கேசரி’ படத்தின் கதைக்களதை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது. பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் ஷாருக்கான்..

சூப்பர் ஸ்டார் ரஜினி​காந்த் நடிப்பில் நெல்சன் திலீப்​கு​மார் இயக்கி வரும் ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகுறது. இதில் எஸ்​.ஜே.சூர்​யா, சுராஜ் வெஞ்​சரமுடு, ரம்யா கிருஷ்ணன், யோகி​பாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்கின்​றனர். மோகன்​லால், சிவராஜ்கு​மார் கவுரவ வேடத்​தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்​கிறது. இந்​நிலையில் இந்தி நடிகரான ஷாருக்கானும் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்க இருப்​ப​தாக கூறப்படுகிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படத்​தில் நடிக்க ஷாருக்​கானிடம் கேட்டதாக​வும் […]

என்னை யாரும் ஓய்வெடுக்க சொன்னதில்லை: கமல் பேச்சு..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, ஸ்டன்ட் இயக்​குநர்​கள் அன்பறிவ் இயக்​கும் படத்​தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை ராஜ்கமல் இன்​டர்​நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்​கிறது. இந்​நிலை​யில், கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்​றில் கலந்துகொண்ட கமல்ஹாசனிடம் இன்றைய தலை​முறையினர் புதிய கூட்டணியை எதிர்பார்ப்​ப​தால் மூத்த நடிகர்​கள் ஓய்வு பெற வேண்​டிய நேரம் வந்து விட்​ட​தா? என கேள்வி எழுப்​பி​னார். இதற்கு கமல், ‘பு​திய கூட்​ட​ணி​கள் உரு​வாக வேண்​டும் என்​பது முக்கி​யம். பழைய விஷயங்​களுக்கு […]

ஷங்கர் இயக்கும் ‘வேள்பாரி’ படத்தில் ஹீரோவாக சூர்யா?

ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. ‘இந்தியன் 2’ படத்துக்கு பிறகு, ‘வேள்பாரி’ நாவலை படமாக்க உள்ளதாக ஷங்கர் பல நிகழ்வுகளில் கூறியிருந்தார். அந்த சமயத்தில் அதன் ஹீரோ யார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். தற்போது ‘வேள்பாரி’ படத்துக்கான திரைக்கதையை உருவாக்கும் பணியில் ஷங்கர் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து ‘வேள்பாரி’ படத்தில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என இணையத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் ஏஐ […]

‘ஜெயிலர்-2’ படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் விநாயகன்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில், ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி, மோகன்லால், சிவராஜ்குமார், மிருணா, எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் ரஜினியுடன் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக நடித்த விநாயகனும், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்திருப்பதை உறுதி செய்திருக்கிறார். இது பற்றித் தெரிவிக்கையில், ‘ஜெயிலர் 2’ குறித்து அனைவரும் கேட்டுக் கொண்டே […]

என்னுடைய ரசிகர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்! – சிவகார்த்திகேயன் விருப்பம்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலை முன்னிட்டு களம் இறங்குகின்றன. இந்நிலையில், சென்னையில் ஃபேன்லி (Fanly) என்ற ஆப்பின் அறிமுக விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அந்நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேசும் போது, ‘இந்த மேடையில் இருந்த 3 பேருக்குமே மூளை அதிகம், எனக்கு குறைவு. அதனாலேயே […]

18-ந்தேதி ரிலீஸாகும் ‘எல்ஐகே’ படத்தின் போஸ்டர் வெளியீடு..

பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இதற்கிடையில்,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்திசெட்டி, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மலேசியா, சிங்கப்பூர் […]

ரஜினியின் ‘எஜமான்’ – விஜய்யின் ‘காவலன்’ படங்கள் ரீ ரிலீஸ்..

ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம் ஆண்டு வெளியான படம் ‘எஜமான்’. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன், செந்தில், கவுண்டமணி, விஜயகுமார், ஐஸ்வர்யா, மனோரமா, நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தனர். ரஜினியின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ஹிட். சிறுவயதில் ‘ரஜினி அங்கிள்’ […]

உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: ரன்வீர்சிங் பதிவு..

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பூத கோலா வழிபாட்டு முறையை ரன்வீர் சிங் நடித்துக் காட்டினார். மேலும், அந்தத் தெய்வத்தை ‘பெண் பேய்’ என்று அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் செயல் துளு நாடு மக்களின் மத உணர்வுகளைப் […]