Browsing category

News

‘அமெரிக்க ஆவி’ என்ற படத்தின் மூலம் நெப்போலியன் ரீ என்ரி..

தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடம், கதாநாயகன் என உலா வந்த நடிகர் நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சினிமா, அரசியலில் இருந்து விலகியிருந்த நெப்போலியன் மீண்டும் தற்போது நடிகராக களமிறங்கி உள்ளார். ‘அமெரிக்க ஆவி’ என்ற பெயரில் அவரது மகன்கள் தனுஷ், குணால் தயாரிக்கும் இந்த படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இது குறித்து நெப்போலியன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ‘பல படங்களில் நடித்து பேரும், புகழையும் பெற்ற நான், கடந்த 4 […]

‘ஜனநாயகன்’ வெளியான சில நாட்களிலேயே லாபம் தரும்: கோலிவுட் கணிப்பு..

விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் பெருந்தொகைகளை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். அந்த தொகைக்கு அவர்களுக்கு லாபம் கிடைக்க ‘ஜனநாயகன்’ படம் குறைந்தது ரூ.500 கோடி வசூலிக்க வேண்டும் என கணிக்கப்படுகிறது. ரூ.500 கோடி வசூல் செய்தால் தான் விநியோகஸ்தர்களுக்கு லாபகரமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இச்சூழலில், கண்டிப்பாக ‘ஜனநாயகன்’ படம் 500 கோடியை சுலபமாக வசூலிக்கும் என உறுதியாக சொல்லப்படுகின்றது. அதுவும் படம் வெளியான சில நாட்களிலேயே இப்படம் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்துவிடும் […]

‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்ஸ்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசிப்படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதனிடையில் ஜனநாயகன் ஆடியோ லான்ச் டிசம்பர் 28-ந்தேசி மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா அப்டேடிற்காக ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர். ‘பராசக்தி’ பட ஆடியோ லான்ச்சை ஜனவரி முதல் வாரத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த முடிவு செய்திருந்த நிலையில், […]

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூர்யாவுக்கு பதிலாக அல்லு அர்ஜுன்..

சூர்யா நடிப்பில் ‘இரும்புக்கை மாயாவி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் ‘இரும்புக் கை மாயாவி’ படத்தை இயக்குவதற்கு சூழல் அமையாமல் போனது. இந்நிலையில், இதே ஸ்கிரிப்ட்டை வைத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது 1962-ம் ஆண்டு வெளியான ‘The Steel Claw’ டிசி காமிக்ஸ் நாவலை அடிப்படையாக கொண்டது ‘இரும்புக் கை மாயாவி’ […]

ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துக்காட்டு: ஏவிஎம்.சரவணன் மறைவுக்கு ரஜினி இரங்கல்..

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம். சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்திய திரைத்துறையின் பழமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ். தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஏவிஎம் தயாரித்துள்ளது. நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரை வெள்ளித்துறையில் அறிமுகம் செய்த நிறுவனம். இதன் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மகன்களில் ஒருவர் ஏவிஎம் […]

அகண்டா 2: தாண்டவம்’ சனாதன தர்மம் பற்றி பேசும் – நந்தமுரி பாலகிருஷ்ணா

தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்.., நடிகர் ஒய் ஜி மகேந்திரன் பேசியதாவது.., ஹைதராபாத்தில் படம் அளவு ஒரு பிரம்மாண்ட விழாவைப் பார்த்தேன். இப்படம் முழுக்க முழுக்க கூஸ்பம்ஸ் அனுபவம் தான். என் டி ஆர் உடன் நடிக்க வேண்டும் என நிறைய ஆசைப்பட்டேன், […]

உடல்நலக்குறைவால் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார்

தமிழ் திரையுலகின் முக்கிய தூண்களில் ஒருவரும் முன்னணி தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் (86) அவர்கள், வயது சார்ந்த உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை மறைவுற்றார். அவரது மறைவு, இந்திய திரையுலகில் ஒரு முக்கிய காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் இழப்பாகக் கருதப்படுகிறது. நேற்று தான் தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்த அவர், பல தலைமுறைகளின் சினிமாவை வடிவமைத்த ஏ.வி.எம். நிறுவனத்தின் முக்கிய ஆளுமையாக இருந்து, எண்ணற்ற வெற்றிப் படங்களை உருவாக்கியவர். தமிழ் சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்புகள் அளவிட […]

அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய […]

“ஓ…! சுகுமாரி” – திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய ஃபேமிலி எண்டர்டெயினர் அறிவிப்பு

திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடி சேரும் கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 2 திரைப்படத்திற்கு “ஓ…! சுகுமாரி” என தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான Pre Wedding Show, Sankranthiki Vasthunnam ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, இந்த ஜோடி நடிக்கும் புதிய திரைப்படம் குடும்பம், காதல், எமோஷன், கிளைமாக்ஸ் திருப்பங்கள் கொண்ட கதை என படக்குழு தெரிவித்துள்ளது. அறிமுக இயக்குனர் பரத் தர்ஷன் இயக்கும் இப்படத்தை மகேஸ்வரா ரெட்டி மூலி […]

‘குட் பேக் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்கள் குறித்த வழக்கு: ஜகோர்ட் உத்தரவு..

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான படம் ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர். ‘குட் பேக் அக்லி பட’த்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இப்பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் அதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், இளையராஜா […]