Browsing category

News

தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் ஒரு பயணம்: சூரி பதிவு..

நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரி தற்போது நாயகனாக முத்திரை பதித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ‘மாமன்’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து சூரி ஹீரோ​வாக நடித்து வரும் படம் ‘மண்டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்கும் இந்​தப் படம், படகு பந்தயத்தை மையமாகக் கொண்டு உரு​வாகிறது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்​மென்ட் சார்​பில் எல்​ரெட் குமார் தயாரிக்​கிறார். இப்​படத்​தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்​ய​ராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஜி.​வி.பிர​காஷ் […]

எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது.. சிலம்பரசன் ஓபன் டாக்..!

எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது என சிலம்பரசன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் […]

நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம் அடிக்க மாட்டேன்.. டி ராஜேந்தர் பேச்சு.!!

நான் டிரம் அடிப்பேன் ஆனால் தம் அடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். நடிகர் இயக்குனர் இசையமைப்பாளர் பின்னணி பாடகர் என பன்முகம் திறமை கொண்டவர் டி ராஜேந்தர். இவரது மகன் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் உயிருள்ளவரை உஷா படத்தின் ரீ ரிலீஸ் செய்தியாளர் சந்திப்பில் டி ராஜேந்தர் கலந்து கொண்டார் அப்போது பேசிய அவர் வழக்கம் போல் அவரது […]

‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் ‘குயின் – (Queen) படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து […]

தமிழக அரசின் திரைப்பட விருதுகள்.. குஷியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா..!

தமிழக அரசின் திரைப்பட விருதுகளுக்காக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சந்தோஷப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நயன்தாரா இவர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் படம் இயக்குவது நடிப்பது என பிசியாக இருந்தாலும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படங்களுக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு விக்னேஷ் சிவன் மற்றும் […]

பெரிய குடும்பத்தின் மீது பழி போட்ட ராஜாங்கம் பரமு.. நந்தினி சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு மற்றும் சிங்க பெண்ணே சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் ஆனந்தி சூர்யா போல் […]

“பேங் பேங்” (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!

KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் “பேங் பேங்” படத்தின் டைட்டில் டீஸர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸரில் ஜாம்பியாக மாறி ஓடுகிறார்கள். பிரபு தேவாவும், வடிவேலுவும் துப்பாக்கியுடன் கெத்தாக வருகிறார்கள். வடிவேலு ஜாம்பி என்று கூறுகிறார். பிரபு வேலு, வடி […]

ராம் சரண் – உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள்; சிரஞ்சீவி சந்தோசப் பகிர்வு

மெகா குடும்பம் இதுவரை இல்லாத அளவிலான இரட்டிப்பு மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. பவர் ஜோடி ராம் சரண் மற்றும் உபாசனா கோனிடேலாவுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான செய்தி, தெலுங்கு திரையுலகின் மிகவும் நேசிக்கப்படும் குடும்பங்களில் ஒன்றான சிரஞ்சீவி இல்லத்தில் இரட்டை கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மெகா பேரரசின் தலைமைப் பொறுப்பாளராக, தனது அளவற்ற மகிழ்ச்சியை கட்டுப்படுத்த […]

“வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் […]

‘ மை லார்ட்’ ( My Lord) திரைப்படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. […]