Browsing category

Latest News

டிராகன் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது […]

புதிய படத்தின் அப்டேட் கொடுத்த இந்திராஜா ரோபோ ஷங்கர்.. வைரலாகும் பதிவு..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர். இவர் தளபதி விஜய் உடன் இணைந்து பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். கடந்த வருடம் கார்த்திக் என்பவருடன் கோலாகாலமாக திருமணம் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்து சில வாரங்களிலேயே அவர்கள் நிகழ்ச்சியில் இருந்து விலகினர் […]

மீண்டும் மீண்டும் ரேஸ் விபத்தில் சிக்கும் அஜித்.ஆனால்? சுரேஷ் சந்திரா போட்ட பதிவு..!

கார் ரேஸில் அஜித்திற்கு மீண்டும் விபத்து ஏற்பட்டு உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது.இந்த படத்தில் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். படம் ஒரு பக்கம் இருக்க […]

சிம்பு நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் கதை என்ன தெரியுமா?

‘டிராகன்’ கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள். இது பற்றிய விவரம் காண்போம்.. ‘டிராகன்’ திரைப்படம் வெளிவாகி வரவேற்பை பெற்று வருகிறது. இச்சூழலில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தெரிவிக்கையில், ‘டிராகன்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துடன் பிரதீப் ரங்கநாதன் – அஸ்வத் மாரிமுத்து கூட்டணி திரும்ப நடக்கும். ‘எஸ்.டி.ஆர்-51’ படத்தை முடித்துவிட்டு, பிரதீப் தேதிகள் எல்லாம் பார்த்துவிட்டு பண்ண முடிவு செய்திருக்கிறோம். 200% அப்படம் ஏஜிஎஸ் நிறுவனத்தில் தான் நடக்கும். எனது அடுத்த படத்தையும் ஏஜிஎஸ் […]

நல்லதும் கெட்டதும் சேர்ந்த கேரக்டரில் வருகிறேன்: ‘தக் லைஃப்’ படம் பற்றி கமல்

‘தக் லைஃப்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கமல் தெரிவித்த தகவல் பார்ப்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி ‘நாயகன்’ படத்திற்கு பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்துள்ளது. ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் கமலுடன் சிம்புவும் இணைந்துள்ளார். தற்போது, இப்படத்தின் ஷூட் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், ஜூனில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கமல்ஹாசன் தக்லைப் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும்? என்பதை பற்றிப் பேசியிருக்கிறார். ‘தக் லைப்’ திரைப்படத்தில் […]

நடிகர் ரவிமோகனை தொடர்ந்து, நடிகர் கௌதம் கார்த்திக் பெயர் மாற்றம்

கதை மாற்றமும் முக்கியம். பெயர் மாற்றமும் முக்கியம் என முடிவெடுத்துள்ளார் கௌதம் கார்த்திக். இது பற்றிய விவரம் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில், கெளதம் கார்த்திக் ‘கடல்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே தோல்வி அடைந்ததால், அவருக்கு வெற்றி என்பது தாமதமாவது தொடர்கிறது. இந்நிலையில், ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது நடிகை மஞ்சிமா மோகனை காதலித்தார். அவரை கடந்த 2022-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். பொதுவாக, சினிமாவில் திருப்புமுனை ஏற்படுவதற்காக நடிகர்கள் பெயரை மாற்றுவதுண்டு. அண்மையில் […]

திரிவேணி சங்கமத்தில் படகில் பயணித்தபடி தமன்னா நடித்த ‘ஒடேலா-2’ பட டீசர் ரிலீஸ்

தமன்னா நடித்துள்ள ‘ஒடேலா-2’ திரைப்பட டீசர் வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. தெலுங்கில் அசோக் தேஜா இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ‘ஒடேலா’ கிரைம் திரில்லர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் 2-ம் பாகம் தமன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்தனர். பெரும்பாலும் வாரணாசியில் படமாக்கப்பட்டது. படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகளவில் உள்ளன. இதற்காக பிரத்யேக பயிற்சிகள் பெற்று, டூப் போடாமலேயே நடித்திருக்கிறார் தமன்னா. தற்போது ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், […]

நான் கேவலமா இருக்கேன்னு விமர்சனம் பண்ணாங்க: நடிகர் பிரதீப் கான்ஃபிடென்ட்

முள்ளு முள்ளாய் தெரியும் பலாப்பழம். ஆனால், அதனுள்ளே இருப்பதென்ன இனிக்கும் சுளையல்லவா. அதுபோல, மனிதர்களைக் கணிப்போம். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கனாதன். இதனை தொடர்ந்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கியதுடன் ஹீரோவாகவும் வெற்றி பெற்றார். தற்போது ‘டிராகன்’ படம் ரிலீஸாகி மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக, ‘லவ் டுடே’ படத்தையும் தயாரித்திருந்தது. இந்நிலையில், ‘லவ் டுடே’ பட […]

அமலாக்கத்துறையின் நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம்: இயக்குனர் ஷங்கர் வருத்தம்

‘எந்திரன்’ படம் தொடர்பாக எடுத்துள்ள அமலாக்கத்துறையின் நடிவடிக்கை பற்றி இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ள தகவல் காண்போம்.. ‘எந்திரன்’ திரைப்படம் தான் எழுதிய ஜுகிபா என்கிற கதையை திருடி எடுக்கப்பட்டதாக ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜுகிபாவுக்கும் ‘எந்திரன்’ படத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளதாக நீதிமன்றமே தெரிவித்ததால் அதை எதிர்த்து ஷங்கர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சில தினங்களுக்கு முன் இந்த வழக்கை காரணம் […]

உள்ளாடை வெளியே தெரிய கைகளை தூக்கி போஸ் கொடுக்கும் பாக்கியலட்சுமி ராதிகா..!

உள்ளாடை வெளியே தெரிய கைகளை தூக்கி ராதிகா போஸ் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடன் டிரஸ்ஸில் கைகளில் தூக்கி உள்ளாடை வெளியே தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி […]