Browsing category

Latest News

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு..

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் ‘பைசன்’ திரைப்படம். தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில் இருந்து சாதிக்கக் கிளம்பிய ஓர் இளைஞன், கபடிக் கோட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் சந்திக்கும் போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற கதையை மிகச் சிறப்பான திரை அனுபவமாக மாற்றியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். அவரது ஒவ்வொரு படத்தையும் நான் உன்னிப்பாகக் […]

தீபாவளி சீர் கொடுக்க வரும் நந்தினி குடும்பத்தினர்.. கோபத்தில் சுந்தரவல்லி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் அவங்க எல்லாரும் வரட்டும் நம்ம இங்கயே ஜாலியா தீபாவளி கொண்டாடலாம் என்று சொல்ல அப்படி இல்ல சார் சீர்வரிசை கொடுத்துட்டு அவங்க […]

வினோத் டெய்லியும் என்னோட தூக்கத்தை கெடுக்கிறார்.. விஜய் சேதுபதியிடம் கம்ப்ளைன்ட் பண்ண வாட்டர் மெலன் ஸ்டார்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் விஜய் சேதுபதி இடம் வினோத் சார் என்ன டெய்லியும் நைட்ல தூங்க விடாம டார்ச்சர் பண்றாரு. அவரோட […]

பைசன் படத்தின் 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

பேச வந்த கம்ருதீன்.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஆதிரை விஜய் சேதுபதி இடம் வாட்டர் மெலன் ஸ்டார் ஆல் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்லை என சொல்லுவதாக சொல்லுகிறார். உடனே கம்ருதீன் பேச […]

கனி தலைமையில் வீடு எப்படி இருக்கு? வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் கனி தலைமையிலான வீடு எப்படி இருந்தது என்று விஜய் சேதுபதி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு கம்ருதீன் இப்படியும் இருந்தாங்க […]

ரஜினி-கமல் இணையும் படத்தை இயக்குகிறார் நெல்சன்?

ரஜினி-கமல் இருவரும் இணைந்து நடிக்க முடிவு செய்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி உண்மைதான் என சௌந்தர்யா ரஜினிகாந்தும் உறுதிபடுத்தியுள்ளார். இப்படத்திற்காக பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருவரும் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ‘கூலி’ படத்தின் எதிர்மறை விமர்சனத்தால் இப்படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் நீக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடிப்பது மாதிரியான கதைகள் இருக்கிறதா என சில இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக […]

வீராங்கனை கார்த்திகாவுக்கு ஜி.வி.பிரகாஷ் வாழ்த்து: பா.ரஞ்சித் தமிழக அரசுக்கு கோரிக்கை..

சென்னையின் கண்ணகி நகர் கார்த்திகா தங்கம் வென்றுள்ளார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து வருகின்றனர். இது குறித்த தகவல்கள் காண்போம்.. 3-வது ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி பக்ரைன் நாட்டில் நடந்து வருகிறது. இதில், கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்திய மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் ஈரானை தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இந்நிலையில், ஆசிய இளையோர் விளையாட்டு கபடியில் தங்கம் வென்ற கார்த்திகாவுக்கு […]

தீபிகா படுகோன் கருத்துக்கு, நவாஸுதின் சித்திக் வரவேற்பு?

பாலிவுட் சினிமாவில் நடிகை தீபிகா படுகோன் ‘தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும்’ என கூறியது தொடர்பாக தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார், நவாஸுதின் சித்திக். அவர் நடித்த ‘தம்மா’ திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது கருத்து கவனம் பெற்றுள்ளது. ‘எனக்கு அதைப் பற்றி (தீபிகா சொன்னது பற்றி) அதிகம் தெரியாது. அந்தக் கருத்தை நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால், எது சவுகரியமாக வேலை நேரமாக இருக்கிறதோ. அது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். […]

கார்த்தி நடிக்கும் ‘கைதி-2’ படத்தின் அப்டேட்ஸ்..

லோகேஷ் இயக்கவிருக்கும் ‘கைதி-2’ பட தகவல்கள் காண்போம்.. ரஜினி-கமல் இணையும் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இல்லை என்பது முடிவாகிவிட்டது. இதனால், அவருடைய அடுத்த படம் குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. பவன் கல்யாண் படம் என்று ஒரு தகவல் இணையத்தில் உலவி வருகிறது. ஆனால், ‘கூலி’ படத்துக்கு பின்பு ‘கைதி 2’ படத்தை இயக்கவே முடிவு செய்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதற்கிடையில்தான் ரஜினி-கமல் இணையும் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது மீண்டும் ‘கைதி […]