Browsing category

Latest News

சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணியில் ‘பிக்காசோ’!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘பிக்காசோ’ (PICASSO) என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டுள்ளார். டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த சிவராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் […]

அசோக் செல்வனின் அன்பில் அவன் வெளியீட்டுத் தேதி!

இளம் முன்னணி நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படம், காதல் கதைக்களத்துடன் அழகான உணர்வுகளையும் இணைத்து, ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், […]

பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ன் முதல் கேப்டனான ஷதிகா!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கியுள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு இடையேயான போட்டி நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், சீசனின் முதல் கேப்டனாக ஷதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் தங்களது பயணத்தைத் தொடங்கிய நிலையில், முதல் கேப்டன்சி டாஸ்க்கை பிக் பாஸ் அறிவித்தார். தலைமைப் பண்புகள், விடாமுயற்சி மற்றும் போட்டி மனப்பான்மையை வெளிப்படுத்தும் வகையில் இந்த கேப்டன்சி போட்டி அமைந்தது. முதல் கேப்டனாகும் போட்டியில், தங்களது தகுதிகளையும் விருப்பத்தையும் போட்டியாளர்கள் […]

இளையராஜா இசையில் மாரி செல்வராஜின் மஞ்சணத்தி படப்பிடிப்பு தொடக்கம்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘மஞ்சணத்தி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. மாரி செல்வராஜ் – இளையராஜா கூட்டணியில் உருவாகும் படம் என்பதால், அறிவிப்பு வெளியான முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. தனது படைப்புகளில் மண் சார்ந்த வாழ்வியலையும், உணர்வுப்பூர்வமான கதைகளையும் பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ், ‘மஞ்சணத்தி’ படத்திலும் தனது தனித்துவமான கதை சொல்லலை தொடர்கிறார். இப்படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், […]

AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒருவரின் முகம், குரல் மற்றும் தோற்றத்தை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் போலி உள்ளடக்கங்களை உருவாக்குவது எளிதாகியுள்ளது. இதனால் தனிநபர்களின் டிஜிட்டல் அடையாளம் மற்றும் அவர்களின் சம்மதத்தைப் பாதுகாப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், தனது அனுமதியின்றி AI மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக், உருமாற்றப்பட்ட புகைப்படங்கள் மற்றும் போலியாகத் தொகுக்கப்பட்ட வீடியோக்களில் தனது அடையாளம் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் சட்டரீதியான நடவடிக்கையை […]

இந்திய சினிமாவில் யாரும் எழுப்பாத கேள்வியை ‘என்ன விலை’ எழுப்புகிறது – நடிகர் கருணாஸ்

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘என்ன விலை’. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். தயாரிப்பாளர் […]

‘வதந்தி சீசன் 2’ எனக்கான அடையாளத்தை கொடுத்துள்ளது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள இணையத் தொடர் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’. எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த இன்வஸ்டிகேட்டிவ் கிரைம் த்ரில்லர் தொடர் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தத் தொடரில் சுந்தரேசன் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ள நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி, தனது வித்தியாசமான […]

ஜெய், பிரியங்கா மோகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ‘பிளாஸ்ட்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 29வது திரைப்படத்தை பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு விஷால் நடித்த ‘சக்ரா’ படத்தை இயக்கியுள்ளார். ‘ஏஜிஎஸ் 29’ என அழைக்கப்படும் இப்படத்தில் ஜெய், பிரியா மோகன், யோகி பாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் 10-வது படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்கும் Production No.10 திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் சிறப்பாக தொடங்கியது. இப்படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ படத்தை இயக்கிய மணிசியோன் இப்படத்தை இயக்குகிறார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய, மனு இரவிச்சந்திரன் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தொடக்க நிகழ்வில், பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்ய, பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். மேலும், டாக்டர் […]

ரஜினிகாந்தை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றனர். இந்த சந்திப்பின்போது, இன்றைய சூழலில் கதை ஆசிரியர்களின் நிலை குறித்து ரஜினிகாந்துடன் ஆலோசனை நடத்தப்பட்டது. எழுத்தாளர்களின் நலன் கருதி, அனைவருடனும் சுமூகமாக பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அவர் பல்வேறு […]