பாய்ஸ் டீமை வச்சு செய்த சௌந்தர்யா.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.


biggboss tamil 8 day 47 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

ஏற்கனவே வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சௌந்தர்யா மற்றும் சிவக்குமாரை வெளிப்படையாக விமர்சிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் முதலாவதாக அன்சிதா நீங்க ஏதாவது ஒன்னு பண்ணுறதுக்காக பண்றது எல்லாம் மொக்கையா இருக்கு கேவலமா இருக்கு என்று சொல்லுகிறார். க்யூட்னு நெனச்சு ஏதோ பண்றீங்க அதெல்லாம் பண்ணாதீங்க பாக்க சகிக்கல என்று சௌந்தர்யாவை வர்ஷினி சொல்லுகிறார்.

சிவாவ பல்வேறு கேரக்டரில் பார்க்க முடியுது ஆனால் சிவாவை சிவாவா இன்னும் பாக்கல என்று சொல்லுகிறார். தர்ஷிகா ரோஷம் என்பது உங்க டிக்ஷனரியில் எங்க இருக்குதுன்னு தெரியல எங்க வீட்டை உப்பு கூட தருவோம் என்று சொல்லுகிறார்.

அதனை தொடர்ந்து வெளியான மூன்றாவது ப்ரோமோவின் சௌந்தர்யாவிற்கு ஒரு டாஸ்க் கொடுக்க அவர் பாய் டீமை வரவைத்து அவருக்கான நேரம் என்று சொல்லி அவர்களை விமர்சனம் செய்கிறார். விஷாலை பார்த்து எதையுமே மூஞ்சிக்கு நேரா பேச மாட்டியா பின்னாடி போய்தான் கவுண்டர் போடுவியா என்று கேட்கிறார்.

ரியானிடம் ஷோவுக்கு என்ன சும்மா உட்கார்ந்து ஜால்ரா அடிக்க வந்தியா என்று கேட்கிறார் தீபக்கிடம் உங்களுக்கு தெரிஞ்ச மேனர்ஸ் ஓட நீங்க விளையாடுங்க எங்களுக்கு தெரிஞ்ச மேனர்ஸ் ஓட நாங்க விளையாடனும் என்று சொல்லுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamilbiggboss tamil 8 day 47 promo 3day 47promo 3ஆளும் புதுசு ஆட்டமும் புதுசுசௌந்தர்யாதீபக்மூன்றாவது ப்ரோமோவிஜய் டிவி