இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பிக்க போகும் பெண் போட்டியாளர் யார் என்று பார்க்கலாம்.
biggboss 8 tamil day 19 promo 2
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக டாஸ்க்களை விளையாடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்குள்ளும் சிறு சிறு வாக்குவாதம் மற்றும் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்கிறது.
அந்த வகையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் நூல் விட ரெடியா என்ற டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் அணி பெண்கள் அணி இருவரும் தனித்தனியாக விளையாட பெண்கள் அணி ஜெய்கின்றனர்.
முதல் ப்ரோமோவில் பெண்கள் அணி ஜெயித்ததினால் அவர்களில் ஒருவர் இந்த வார எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் அவரவர் விருப்பங்களை சொல்ல மீதி இருக்கும் நால்வர் முடிவெடுத்து யாரை காப்பாற்றலாம் என்பதை சொல்லுகின்றனர்.
இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது