இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பத்து வாரங்களை கடந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்து கொண்டிருக்கிறது. ஆனால் போட்டியாளர்கள் குறையாமல் இருந்ததால் கடந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடந்து ஆனந்தியும் சாச்சனாவும் வெளியேற்றப்பட்டனர்.
இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் வெளியான ஓட்டு நிலவரம் படி கடைசி இடத்தில் தர்ஷிகாவும் அதற்கு முன் விஷாலும் இருக்கின்றனர்.
இந்த வாரமும் இரண்டு எலிமினேஷன் நடந்தால் இருவரும் வெளியேற்றப்படுவார்கள் அப்படி ஒரு எலிமினேஷன் மட்டுமே என்றால் தர்ஷிகா வெளியேற்றப்படுவார் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.